இலங்கை ஏர்லைன்ஸ் விமானத்தில் நேற்றிரவு பறவை மோதியதால் அவசரமாக சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
கொழும்பிலிருந்து 152 பயணிகளுடன் ஏர்லங்கா விமானம் நேற்றிரவு சென்னைக்கு வந்து கொண்டிருந்தது.
சென்னைக்கு வருவதற்கு சுமார் அரை மணி நேரம் இருந்தபோது, நடுவானில் விமானத்தின் மீது பறவை மோதியது. இதில் என்ஜின் பகுதிக்குள் பறவை சென்று விட்டது.
ஆனால் என்ஜின் பழுதாகி விட்டதால் நேற்றிரவு விமானம் கொழும்பு செல்வது ரத்து செய்யப்பட்டது. விமானத்தில் செல்ல இருந்த பயணிகள் அனைவரும் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டனர். இன்று காலையில் விமானம் சரி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து விமானம் கொழும்பு புறப்பட்டு சென்றது.