திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
ஜனவரி 15ஆம் தேதி ஆண்டுதோறும் திருவள்ளுவர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு வள்ளுவர் கோட்டத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு, தமிழக நிதியமைச்சர் க.அன்பழகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். விழாவில் அமைச்சர் பரிதி இளம்வழுதி, சென்னை மாவட்ட மேயர் சுப்ரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு தலைவர்கள், அமைச்சர்கள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.