தமிழகத்தைச் சேர்ந்த இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு உலகப் புகழ் பெற்ற 'கோல்டன் குளோப் விருது' கிடைத்தது குறித்து மகிழ்ச்சி அடைவதோடு, அவருக்கு தமிழக முதலமைச்சர் என்ற முறையில் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
இந்த விருதைப் பெறும் முதல் இந்தியர் என்ற பெருமையை ரஹ்மான் அடைந்துள்ளார் என்று தெரிவித்துள்ள முதலமைச்சர், 'ஸ்லம் டாக் மில்லியனர்'' என்ற ஆங்கிலப் படத்துக்கு இசை அமைத்தமைக்காக அவருக்கு இந்த விருது கிடைத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
தமிழ், இந்தி போன்ற மொழிப் படங்களுக்கு மிகச் சிறப்பாக இசை அமைத்து பல்வேறு விருதுகளைப் பெற்ற ரஹ்மான் தற்போது உலக அளவில் விருது பெற்றுள்ளார். அவர் இசைத் துறையில் மேலும் பல வெற்றிகளைக் குவித்திட எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார்.