பொ‌ங்கலு‌க்கு 5,000 காவல‌ர்க‌ள் பாதுகாப்பு: காவ‌ல்துறை ஆணைய‌ர் ராதா‌‌கிரு‌‌ஷ்ண‌ன்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் சுமார் 5 ஆயிரம் காவல‌‌ர்க‌ளபாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்‌படுவா‌ர்க‌ள் எ‌ன்று செ‌ன்னை மாநகர காவ‌ல்துறை ஆணைய‌ர் ராதாகிருஷ்ணன் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், போகிப்பண்டிகை கொண்டாட்டத்தின்போது பொதுமக்கள் சுற்று சூழலுக்கும், சுகாதாரத்திற்கும் தீங்கு ஏற்படுத்தும் பொருட்களான பிளாஸ்டிக் பொருட்கள், பா‌லிதீன் பைகள் மற்றும் டயர்கள் போன்றவற்றை தீயிட்டுக் கொளுத்தக்கூடாது என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மாட்டுசாணம் மற்றும் பழைய மரக்கட்டைகள் போன்றவற்றை எரித்து போகிப்பண்டிகையை கொண்டாடி மகிழ எந்த தடையுமில்லை. இது தொடர்பாக, விதிமுறைகளை மீறுபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் சென்னைக் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் சுமார் 5 ஆயிரம் காவல‌‌ர்க‌ள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு, பொது மக்கள் மகிழ்ச்சியுடன் பொங்கலை கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும், 16.01.2009 (வெள்ளிக்கிழமை) அன்று காணும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொது மக்கள் அதிகமாக கூடும் இடங்கள் தமிழ்நாடு அரசு சுற்றுலா மையம், சர்க்கஸ், மெரினா கடற்கரை, அண்ணா சமாதி, எம்.ஜி.ஆர். சமாதி, எல்லியட்ஸ் கடற்கரை, கிண்டி சிறுவர் பூங்கா புத்தகக் கண்காட்சி மற்றும் அனைத்து கேளிக்கை அரங்குகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

கடற்கரை பகுதியில் குதிரைப் படையினரும் பாதுகாப்பு பணியில் உள்ளனர். முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் கடலில் குளிப்பதை தடுப்பதற்காக தடுப்பு வேலிகள் அமைத்து சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் கடலில் குளிப்பதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, கடற்கரை பகுதிகளில் 35 மீனவர்கள் அடங்கிய உயிர்காக்கும் நீச்சல் மீட்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களையும் மற்றும் பொது இடங்களில் அமர்ந்து மது அருந்துபவர்களையும் கையும் களவுமாக பிடித்து கடுமையான நடவடிக்கை எடுக்க அனைத்து முக்கிய பகுதிகளிலும் சாதாரண உடையில் காவல‌ர்க‌ள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள் எ‌ன்று காவ‌ல்துறை ஆணைய‌ர் ராதா ‌கிரு‌ஷ்ண‌ன் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்