லாரி உரிமையாளர்கள் போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு

ஈரோ‌ட்டி‌ல் லாரி உரிமையாளர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலம் மற்றும் தர்ணா போராட்டம் நடத்த காவல்துறையினர் அனுமதி மறுக்கப்பட்டதால் அ‌‌ங்கு பரபர‌ப்பு ஏற்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பெருந்துறை, சத்தியமங்கலம் உள்ளிட்ட பகுதியில் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பாக இன்று காலை கண்டன ஊர்வலம் மற்றும் மத்திய அரசு அலுவலகம் முன் தர்ணா போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர்.

இதற்கு ஈரோடு மாவட்ட காவல்துறை அனுமதி மறு‌த்தது. இதன் காரணமாக லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் அ‌தி‌ர்‌ப்தியடைந்துள்ளனர்.

அடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவு செய்ய அந்தந்த பகுதியில் உள்ள சங்க பொறுப்பாளர்கள் அவசர கூட்டம் நடத்தி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்