ஈரோட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை

திங்கள், 12 ஜனவரி 2009 (15:29 IST)
ஈரோட்டில் மாப்பிள்ளை பிடிக்காததால் வேதனை அடை‌ந்த மணப்பெண் தூ‌க்கு‌ப்போ‌ட்டு தற்கொலை செய்து கொ‌ண்டா‌ர். மக‌ள் இற‌ந்த தூ‌க்க‌ம் தா‌ங்காம‌ல் தா‌ய், த‌ந்தை, ‌த‌ங்கை ஆ‌கியோ‌ர் ‌விஷ‌ம் கு‌டி‌த்து தற்கொலை செய்து கொ‌ண்டன‌ர்.

ஈரோடு வளையகார வீதியை சேர்‌ந்தவர் கந்தசாமி (58). நகை வேலை செய்து வருகிறார். இவருக்கு செல்வி (45) என்ற மனைவி மற்றும் திலீப்குமார் (28) என்ற மகனும் திவ்யா (25), ரம்யா (24) என்ற இரு மகள்களும் உள்ளனர். தீலிப்குமார் நகைவேலை செய்து வருகிறார். திவ்யா படித்து வருகிறார். ரம்யா படிப்பு முடித்து வீட்டில் உள்ளார்.

இந்த நிலையில் வெள்ளாங்கோவில் அருகே திவ்யாவிற்கு மாப்பி‌ள்ளை பார்த்து நிச்சயம் செய்துள்ளனர். ஆனால் மாப்பி‌‌ள்ளையை திவ்யாவிற்கு பிடிக்கவில்லை. இதனால் திவ்யா மனம் வெறுத்து தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இவரை மருத்துவமனையில் இருந்து திலீப்குமார் வீட்டிற்கு எடுத்து வருகையில் இவருடைய அப்பா, அம்மா மற்றும் தங்கை ஆகிய மூவரும் விஷம் குடி‌த்து தற்கொலை செய்துகொண்டனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் இறந்த செய்தி இப்பகுதியில் காட்டுதீயாய் பரவியது. இது குறித்து ஈரோடு காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்