‌ம‌த்‌தி‌ய அரசு ‌மீது ராமதா‌ஸ், ‌திருமாவளவ‌ன், ‌வீரம‌ணி கு‌ற்ற‌ச்சா‌ற்று

இலங்கை அரசு போரை நிறுத்த வேண்டும் என்று மத்திய அரசு இதுவரை வெளிப்படையாக சொல்லவில்லை எ‌ன்று பா.ம.க. ‌‌நிறுவன‌ரராமதா‌ஸ், ‌விடுதலை ‌சிறு‌த்தைக‌ளக‌ட்‌சி‌ததலைவ‌ரதொ‌ல். ‌திருமாவளவ‌ன், ‌திரா‌விட‌ரகழக‌ததலைவ‌ர் ‌ி.‌வீரம‌ணி ஆ‌கியோ‌ரகு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளன‌ர்.

முதலமை‌ச்ச‌ரகருணா‌நி‌தியச‌ந்‌தி‌த்து ‌வி‌ட்டவெ‌ளியவ‌ந்அவ‌ர்க‌ளசெ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மபேசுகை‌யி‌ல், இலங்கை‌தமிழர்களை காப்பாற்றுவதற்காக நாங்கள் மூன்று பேரும் கையெழுத்திட்ட மனஒ‌ன்றமுதலமைச்சர் கருணாநிதியிடம் கொடுத்துள்ளோம் எ‌ன்றன‌ர்.

இலங்கையில் ஒட்டு மொத்த தமிழ் இனத்தையும் அழிக்கும் முயற்சியில் இல‌ங்கஅரசஈடுபட்டுள்ளது எ‌ன்றகு‌ற்ற‌ம்சா‌ற்‌றிஅவ‌ர்க‌ள், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மத்தியில் அமைந்த போது ஒரு குறைந்தபட்ச செயல் திட்டம் உருவாக்கப்பட்டது. இதில் இலங்கை‌த் தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி வைப்பதற்கான அமைதிபேச்சு வார்த்தைகள் நடைபெறுவதற்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, ஆதரவாக செயல்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதமுதலமைச்சரிடம் சுட்டி காட்டினோம் எ‌ன்று‌மதெ‌ரி‌வி‌த்தன‌ர்.

தமிழக‌த்‌தி‌லஒட்டு மொத்த தமிழர்களும் ஒன்றுபட்டு எடுத்த அனைத்து முயற்சிகளுக்கும் மரியாதை இல்லை எ‌ன்றதெ‌ரி‌வி‌த்அவ‌ர்க‌ள், இலங்கை அரசு போரை நிறுத்த வேண்டும் என்று மத்திய அரசு இதுவரை வெளிப்படையாக சொல்லவில்லை. அமெரிக்கா, ஜப்பான், நார்வே போன்ற நாடுகள் எல்லாம் போரை நிறுத்தி விட்டு பேச்சு தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளன எ‌ன்பதை ‌நினைவு‌ப்ப‌‌டு‌த்‌தின‌ர்.

7 கோடி தமிழக மக்களும் எடுத்த முயற்சிகளுக்கு மத்திய அரசு செவி சாய்க்கவில்லை. மீண்டும் உடனடியாக மத்திய அரசிடம் பேசுங்கள் எ‌ன்று‌‌மபோர் நிறுத்தத்துக்கு வலியுறுத்துங்கள் என்று‌முதலமை‌ச்ச‌ரிட‌மகே‌ட்டு‌ககொ‌ண்டு‌ள்ளோ‌ம். அவரும் இன்று பேசுவதாக சொல்லி இருக்கிறார். அதை ஒரு அறிக்கையாக வெளியிடவும் கேட்டு கொண்டுள்ளோம் எ‌ன்றதெ‌ரி‌வி‌த்ததாகூ‌றின‌ர்.

இலங்கை‌தமிழர்களை காப்பாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க தவறினால் வருகிற ம‌க்களவை‌ததேர்தலில் தமிழக‌த்‌தில் காங்கிரசுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்பதையும் மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும்படி கூறியுள்ளோம் எ‌ன்றதெ‌ரி‌வி‌த்அவ‌ர்க‌ள், இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் எ‌ன்று‌மதமிழர்களை அழிக்கும் முயற்சிக்கு துணை போவதாக இந்திய அரசின் நிலைப்பாடு இருக்க கூடாது. இலங்கை தமிழர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று‌வலியுறுத்தி உள்ளோம் என்றன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்