லாரி உரிமையாளர்கள் மீது எஸ்மா சட்டம் பாயாது: அமை‌ச்ச‌ர் துரைமுருக‌ன்

தமிழகத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள லாரி உரிமையாளர்கள் மீது எஸ்மா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை என்று சட்டம் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

webdunia photoFILE
வேலூ‌ர் மாவ‌ட்ட‌ம் காட்பாடியில் செ‌ய்‌தியா‌ள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அவ‌ர், தமிழகத்தில் கீழ் நீதிமன்றங்களில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அரசு ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் ரூ.100 கோடியில் உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டு வருகிறது எ‌ன்றா‌ர்.

தமிழகத்தில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள லாரி உரிமையாளர்கள் மீது எஸ்மா சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை எ‌ன்று தெ‌ரி‌வி‌த்த துரைமுருக‌ன், சென்னையில் உச்ச நீதிமன்ற கிளை அமைக்க தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது எ‌ன்றா‌ர்.

உயர் நீதிமன்ற உத்தரவின்படி சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் விடுதி வசதி புதுப்பிக்கப்பட்டு உள்ளது. விளையாட்டு மைதானமும் அமைக்கப்பட்டு வருகிறது. வருகிற 25ஆம் தேதிக்குள் இந்த பணிகள் முடிவடையும். இரவு காவலர்களாக முன்னாள் ராணுவத்தினரை நியமிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது எ‌ன்று அமை‌ச்ச‌ர் துரைமுருக‌ன் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.