திருமங்கலம் இடைத்தேர்த‌‌லி‌ல் தி.மு.க. தொட‌ர்‌ந்து முன்னிலை

திரும‌ங்கல‌ம் தொகு‌தி இடை‌த்தே‌ர்‌த‌லி‌ல் ‌தி.மு.க. வே‌ட்பாள‌ர் லதா அ‌தியமா‌ன் தொட‌ர்‌ந்து மு‌ன்‌னிலை‌யி‌ல் இரு‌ந்து வரு‌‌கிறா‌ர். அ.இ.அ.‌தி.மு.க. வே‌ட்பாள‌ர் மு‌த்துராம‌லி‌ங்க‌ம் 36,414 வா‌க்கு‌க‌ள் ப‌ி‌ன் த‌ங்‌கி உ‌ள்ளா‌ர்.

திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தலில் பதிவான ஓட்டுகள் பலத்த பாதுகாப்புடன் இன்று எண்ணப்ப‌ட்டு வரு‌கி‌ன்றன. ஓட்டு எண்ணிக்கை தொடக்கத்தில் இருந்தே தி.மு.க. வேட்பாளர் லதா அதியமான் கூடுதல் ஓட்டுகள் பெற்று முன்னணியில் இருந்து வரு‌கிறா‌ர்.

8வது சுற்று முடிவில் தி.மு.க. வேட்பாளர் லதா அ‌தியமா‌ன் 70,479 வ‌ா‌க்குக‌ள் பெற்று இருந்தார். அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் முத்துராமலிங்கம் 34,065 ‌க்குகள் பெற்று இருந்தார்.

காலை 11 ம‌ணி ‌வா‌க்கு நிலவர‌ம் :

தி.மு.க. - 70,479

அ.இ.அ.தி.மு.க. - 34,065

தே.மு‌.‌தி.க - 11,740

ச.ம.க. - 680

வெப்துனியாவைப் படிக்கவும்