திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு மதுரை மருத்துவக் கல்லூரியில் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது.
மொத்தம் 42 மத்திய அரசு ஊழியர்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாக்கு எண்ணும் இடத்தில் சவுக்கு கட்டைகளால் தடுப்பு அமைக்கப்பட்டு, கம்பி வேலியும் போடப்பட்டுள்ளது.
வேட்பாளர்களின் ஏஜென்ட்களுக்கு புகைப்படம் ஒட்டிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அந்த அட்டை உள்ளவர்கள் மட்டுமே வளாகத்துக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வாக்கு எண்ணும் மையத்தில் செல்பேசி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மின்னணு இயந்திர வாக்குப்பதிவு என்பதால் ஒரு மணி நேரத்திலேயே முன்னணி நிலவரம் தெரியவரும். பகல் 12 மணிக்குள் முடிவு தெரிந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.