அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்க நடவடிக்கை : டி.ஆர். பாலு

ஞாயிறு, 11 ஜனவரி 2009 (17:51 IST)
லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக சரக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதையடுத்து பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமை‌ச்ச‌ர் டி.ஆர். பாலு கூறியுள்ளார்.

கரூர் மாவட்டம் லாலாப்பேட்டையில் கட்டப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலத்தை திறந்துவைக்க வந்துள்ள மத்திய கப்பல், சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் டி.ஆர். பாலு செய்தியாளர்களிடம் பேசினார்.

நாளை மாநில போக்குவரத்து அமைச்சர்கள் மாநாடு டெல்லியில் நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொள்ள லாரி உரிமையாளர்களை அழைத்துள்ளோம். கலந்துகொள்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

லாரிகள் வேலை நிறுத்தம் நீடித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால், நடவடிக்கை கடுமையாக இருக்காது என்று கூறிய டி.ஆர். பாலு, பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்