கோபி கொண்டத்துகாளியம்மன் கோவில் தீ மிதிப்பு: லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்
ஈரோடு மாவட்டம் கோபி பாரியூர் கொண்டத்துகாளியம்மன் கோவிலில் நடந்த தீ மிதிப்பு விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ளது பாரியூர். இங்குள்ள கொண்டத்துகாளியம்மன் தமிழகத்தில் புகழ்பெற்ற அம்மன்களின் ஒன்றாகும். இந்த கோவிலில் ஒவ்வொறு வருடமும் மார்கழி மாதம் குண்டம் திருவிழா நடப்பது வழக்கம்.
இந்த வருட குண்டம் தீ மிதிப்பு விழா நேற்று நடைபெற்றது. அதிகாலையில் இருந்தே பக்தர்கள் நீண்ட வரிசையில் மஞ்சள் சேலை உடுத்தி கையில் வேப்பிலையுடன் தீ மிதிக்க காத்திருந்தனர். திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் விஷேச அபிஷேகங்கள் செய்யப்பட்டது.
கோபி, சத்தியமங்கலம், பவானி, அந்தியூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தீ மிதித்தனர்.