ச‌ங்கரராம‌ன் கொலை வழ‌க்‌கி‌ல் ‌பி‌ப்.26இ‌ல் சா‌‌ட்‌சிக‌‌ளிட‌‌ம் ‌விசாரணை

கா‌‌ஞ்‌சிபுர‌ம் வரதராஜ‌ர் கோ‌வி‌ல் மேலாள‌ர் ச‌ங்கரராம‌ன் கொலை வழ‌க்‌கி‌ல் சா‌ட்‌சிக‌ளிட‌‌ம் ‌‌விசாரணை பி‌ப்ரவ‌ரி 26ஆ‌ம் ‌தே‌தி முத‌ல் தொட‌‌ங்கு‌கிறது.

புது‌ச்சே‌ரி மாவ‌ட்ட ‌நீ‌திம‌ன்ற‌‌த்‌தி‌ல் நட‌ந்து வரு‌ம் இ‌ந்த வழ‌க்கு ‌நீ‌திப‌தி டி.‌கிரு‌‌‌ஷ்ண ராஜா மு‌ன்‌னிலை‌‌யி‌‌ல் இ‌ன்று ‌விசாரணை‌க்கு வ‌ந்தது.

அ‌ப்போது கு‌ற்ற‌ம்சா‌ற்ற‌ப்ப‌ட்ட 24 பே‌‌ரி‌ல் 17 பே‌ர் ம‌ட்டுமே ஆஜரானா‌ர்க‌ள். அவ‌ர்‌க‌‌ள் வராதது கு‌றி‌த்து ‌த‌னி‌த்த‌னியாக மனு கொடு‌த்தன‌ர்.

இதை‌த் தொட‌ர்‌ந்து இரு தர‌ப்‌பு வழ‌க்க‌றிஞ‌ர்க‌ளிட‌ம் ஆலோ‌சி‌த்த ‌பி‌ன்ன‌ர் வழ‌க்கு ‌விசாரணையை ‌பி‌ப்ரவ‌ரி 26ஆ‌‌ம் தே‌தி‌க்கு ‌நீ‌திப‌தி த‌ள்‌ளி வை‌த்தா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்