வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தம்: தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை பெய்யும்
வியாழன், 8 ஜனவரி 2009 (10:08 IST)
வங்கக் கடலில், இலங்கை அருகே நேற்று முன்தினம் குறைந்த காற்றழுத்தம் உருவானது. இதையடுத்து, தமிழகத்தில் பரவலாக மழை பெய்கிறது.
அதிகபட்சமாக வேதாரண்யத்தில் 40 மிமீ மழை பெய்துள்ளது. பரங்கிப்பேட்டை 20 மிமீ, காரைக்கால், நாகப்பட்டினம் 10 மிமீ மழை பெய்துள்ளது.
தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும். சென்னையை பொருத்தவரை பொதுவாக மேகமூட்டம் காணப்படும். ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.