இலவச பொ‌ங்க‌ல் பொரு‌ள் வழ‌ங்க‌ப்படாததை க‌ண்டி‌த்து ம‌றிய‌ல்

திரு‌ச்‌சி மாவ‌ட்ட‌ம் மண‌ப்பாறை‌ பகு‌திக‌ளி‌ல் த‌மிழக அரசு அ‌றி‌வி‌த்து‌ள்ள இலவச பொ‌ங்க‌ல் பொரு‌ட்க‌ள் ‌வழ‌ங்க‌ப்படாததை க‌ண்டி‌த்து ‌மண‌ப்பாறை- கோ‌வி‌ல்ப‌‌ட்டி சாலை‌யி‌ல் அ.இ.அ.‌தி.மு.க.‌‌வினரு‌ம் மா‌ர்‌க்‌‌‌சி‌‌ஸ்‌ட் க‌ம்யூ‌னி‌‌‌ஸ்‌ட் க‌ட்‌சினரு‌ம் இ‌ன்று ம‌றிய‌ல் போரா‌ட்ட‌த்‌தி‌ல் ஈடுப‌ட்டன‌ர்.

இது ப‌‌ற்‌றி தகவ‌ல் அ‌றி‌‌ந்து அ‌ங்கு ‌விரை‌ந்து வ‌ந்த உணவு வழ‌ங்க‌ல் துறை அ‌திகா‌ரிக‌ள் ம‌ற்று‌ம் வருவா‌ய்‌த்துறை அ‌திகா‌ரிக‌ள், அவ‌ர்க‌ளிட‌ம் பேச‌்சுவா‌ர்‌த்தை நட‌‌த்‌தி ம‌றியலை கை‌விட‌‌ செ‌ய்தன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்