திருமங்கலம் தொகுதியில் தேர்தல் பிரசாரத்தின் போது, நான் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக கூறுவதில் எந்த உண்மையும் இல்லை என்று தெரிவித்த அமைச்சர் மு.க.ஸ்டாலின், எந்த வாக்காளர்களுக்கும் நான் பணம் கொடுக்கவில்லை என்றார்.
நான் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது, புதிதாக பிறந்த குழந்தையை என்னிடம் கொடுத்து வாழ்த்து தெரிவிக்க கூறினார்கள். அந்த குழந்தைக்கு நான் பிறந்த நாள் பரிசு கொடுத்தேன். அதைத்தான் நான் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக சொல்கிறார்கள் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
நான் ஒரு குழந்தைக்கு பிறந்த நாள் பரிசு தான் கொடுத்தேன் என்பதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. தேவைப்படும் போது அந்த ஆதாரத்தை காட்டுவேன் என்று அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.