விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசியதாக கைது செய்யப்பட்ட இயக்குனர் சீமானின் விடுதலை பிணைய மனுவை ஈரோடு நீதிமன்றம் மீண்டும் நிராகரித்தது.
ஈரோட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் சீமான், பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி, தமிழ் தேச பொதுவுடைமை கட்சி பொதுச்செயலாளர் மணியரசன் ஆகியோர் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக, அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து 3 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து அவர்கள் விடுதலை பிணை கேட்டு ஈரோடு நீதிமன்றத்தில் கடந்த மாதம் டிசம்பர் 23ஆம் தேதி மனு தாக்கல் செய்தனர். இந்த மனு விசாரணைக்கு வந்த போது காவல்துறை தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால் மனுவை நிராகரித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
இந்நிலையில் 3 பேரும் மீண்டும் ஈரோடு நீதிமன்றத்தில் விடுதலை பிணைய கேட்டு மனுதாக்கல் செய்தனர். அப்போது, இயக்குனர் சீமான் உள்பட மூன்று பேருக்கும் விடுதலை பிணை வழங்க கூடாது என்று அரசு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார்.