மீண்டும் அமைச்சரானார் வீரபாண்டி ஆறுமுகம்

சனி, 3 ஜனவரி 2009 (15:58 IST)
உட‌ல் நல‌க்குறைவா‌ல் அமை‌ச்ச‌ர் பொறு‌ப்‌பி‌ல் இரு‌ந்து ‌விடு‌வி‌க்க‌ப்ப‌ட்ட ‌வீரபா‌ண்டி ஆறுமுக‌ம், த‌ற்போது முழு குண‌ம் அடை‌ந்ததை‌த் தொட‌ர்‌ந்து ‌மீ‌ண்டு‌ம் விவசாய‌த்துறை அமை‌ச்சராக இ‌ன்று பொறு‌ப்பே‌ற்று‌‌க் கொ‌ண்டா‌ர்.

webdunia photoFILE
உடல் நிலை குறைவு காரணமாக சிறிது காலம் இலாகா இ‌ல்லாத அமைச்சராக வீரபாண்டி ஆறுமுகம் இருந்தார். அவர் பார்த்து வந்த ‌விவசாய‌த்துறையை அமைச்சர் நேரு ூடுதலாக கவனித்து வந்தார்.

தற்போது அவருக்கு உடல்நலம் அடைந்தவுடன் மீண்டும் விவசாய‌த்துறை வழங்கப்பட்டு உள்ளது எ‌ன்று தமிழக தலைமைச் செயலாளர் ஸ்ரீப‌தி இ‌ன்று வெளியிட்டுள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌‌ப்‌பி‌ல் தெரிவித்துள்ளார்.