திருமங்கலம் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.இ.அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா இன்று முதல் நான்கு நாட்கள் பிரசாரம் செய்கிறார்.
webdunia photo
FILE
திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் முத்துராமலிங்கத்தை ஆதரித்து பிரசாரம் செய்யும் ஜெயலலிதா, முதல் நாளான இன்று பெருங்குடி, கைத்தறி நகர், நிலையூர், சம்பகுளம், வளையங்குளம், எலியார்பத்தி, பாரபத்தி, கூடக்கோவில், சின்ன உலகாணி, பெரிய உலகாணி, மைக்குடி, கீழக்கோட்டை, நடுக்கோட்டை, மேலக்கோட்டை, சிவரக்கோட்டை, கரிசல்காலாம்பட்டி, சுவாமி மல்லம்பட்டி, செங்கப்படை, கட்ராம்பட்டி, ஆலம்பட்டி ஆகிய இடங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார்.
நாளை (4ஆம் தேதி) புளியங்குளம், செக்காணூரணி, சிக்கம்பட்டி, அனுப்பப்பட்டி காலனி, கரடிக்கல், கீழ உரப்பனூர், பள்ளக்காபட்டி, மேல உரப்பனூர், சித்தாலை, புங்கங்குளம், அழகுச்சிறை, வாகைக்குளம், சின்ன வாகைக்குளம், காண்டை, உசிலம்பட்டி மெயின் ரோடு, பண்ணிக்குண்டு, சாத்தங்குடி, கண்டுகுளம் ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்கிறார்.
5ஆம் தேதி கூத்தியார்குண்டு, சிவரக்கோட்டை, அகத்தாப்பட்டி, லாலாபுரம், வில்லூர், கள்ளிக்குடி, கே.வெள்ளாகுளம், விருதுநகர் மெயின் ரோடு, மேலப்பட்டி, சென்னம்பட்டி, குராயூர், நொச்சிக்குளம், மருதக்குடி, வேப்பங்குளம், இலுப்பங்குளம் போன்ற இடங்களில் பிரசாரம் செய்யும் ஜெயலலிதா, 6ஆம் தேதி திருமங்கலம் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலை அருகில் நடக்கும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.
இதனிடையே தி.மு.க. வேட்பாளர் லதா அதியமானை ஆதரித்து முதலமைச்சர் கருணாநிதி வரும் 5ஆம் தேதி திருமங்கலம் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். இந்த கூட்டத்தில் தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.