5ஆ‌ம் தே‌தி மணல் லாரிகளு‌ம் ஓடாது: லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு

சனி, 3 ஜனவரி 2009 (09:41 IST)
அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் 5ஆ‌ம் தேதி நடத்தும் லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.

இது தொட‌ர்பாக அ‌ச்சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆர்.முனிரத்தினம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசு, டீசல் விலையை ஒரு லிட்டருக்கு 10 ரூபாய் குறைக்க வேண்டும் என்று கோரி 5ஆ‌ம் தேதி முதல் லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் 60 லட்சம் லாரிகள் இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்கின்றன. இந்தப் போராட்டத்திற்கு தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் ஆதரவு அளிக்கிறது.

இதன்காரணமாக தமிழ்நாடு முழுவதும் சுமார் 75,000 மணல் லாரிகள் 5ஆ‌ம் தேதி இரவு 12 மணி முதல் காலவரையின்றி ஓடாது. இதனால் கட்டுமானத் தொழில்கள் கடுமையாகப் பாதிக்கும் எ‌ன்று தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்