‌திரும‌‌ங்கல‌த்‌தி‌ல் துணை ராணுவ‌த்‌தின‌ர் பாதுகா‌ப்பு : நரே‌ஷ்கு‌ப்தா

வெள்ளி, 2 ஜனவரி 2009 (14:02 IST)
திருமங்கலம் தொகுதியில் ஜனவரி 4ஆம் தேதி முதல் துணை ராணு‌வப்படை‌யின‌ர் பாதுகாப்பு பணியை மேற்கொள்வார்கள் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா தெரிவித்துள்ளார்.

திரும‌ங்கல‌ம் தொகு‌தி ச‌ட்ட‌ம‌ன்ற‌த்து‌க்கான இடை‌த்தே‌‌ர்த‌ல் ப‌ணி‌க்கான பாதுகா‌ப்பு ப‌ணிக‌ள் கு‌றி‌த்து ஆ‌ய்வு செ‌ய்ய த‌மிழக தலைமை தே‌‌ர்த‌ல் அ‌‌திகா‌ரி நரே‌ஷ்கு‌ப்தா, துணை ஆணைய‌ர் ஜெய ‌பிரகா‌ஷ் ஆ‌கியோ‌ர் இ‌ன்று ‌திரும‌ங்கல‌ம் வ‌ந்தன‌ர்.

அ‌ப்போது செ‌ய்‌‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய நரே‌ஷ் கு‌ப்தா, தி.மு.க, அ.தி.மு.க கட்சியினர் கொடுத்த புகார்கள் குறித்து தேர்தல் பார்வையாளர்களும், காவ‌ல்துறை‌யினரு‌ம் விசாரிப்பார்கள் எ‌ன்றா‌ர்.

தேர்தலை நே‌ர்மறையாக நடத்துவது மட்டுமே என்னுடைய குறிக்கோள் எ‌ன்று தெ‌ரி‌வி‌த்த நரே‌‌ஷ் கு‌ப்தா, என் மீதான குற்றச்சா‌ற்றுகள் குறித்து பத்திரிக்கையாளர்களே நீதிபதிகளாக இருந்து தீர்ப்புக் கூறட்டும் எ‌ன்றா‌ர்.

புகார் கொடுக்க வந்த தி.மு.க.வினரை நான் அலட்சியப்படுத்தியதாகக் கூறப்படுவது உண்மையல்ல எ‌ன்று மறு‌த்த நரே‌ஷ் கு‌ப்தா, திருமங்கலம் தொகுதியில் ஜனவரி 4ஆம் தேதி முதல் துணை ராணு‌வப்படை‌யின‌ர் பாதுகாப்பு பணியை மேற்கொள்வார்கள் எ‌ன்றா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்