இ‌ந்‌திய கட‌‌ல்சா‌ர் ப‌ல்கலைக் கழக‌ம் : முத‌ல்வ‌ர் கருணா‌நி‌தி துவ‌க்க‌ம்

புதன், 31 டிசம்பர் 2008 (21:26 IST)
செ‌ன்னை உ‌த்த‌ண்டி‌யி‌ல் இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தை இ‌ன்று துவக்கி வைத்த முத‌ல்வ‌ரகருணாந‌ி‌தி, புதிய ‌நி‌ர்வாக கட்டிடங்க‌ள் க‌ட்டுவத‌ற்கு அடி‌க்க‌லநா‌ட்டினா‌ர்.

PIB PhotoPIB
தேசிய கடல்சார் பல்கலைக்கழகம் செம்மஞ்சேரியில் உள்ள 300 ஏக்கர் நிலப்பரப்பில் 100 ஏக்கரில் அமையவுள்ளது. உலகத்தரம் வாய்ந்த இந்த பல்கலைக்கழகம் ரூ.245 கோடி செலவில் அமைக்கப்படு‌‌கிறது. இந்த பல்கலைக்கழகத்திற்காக மும்பை, கொல்கத்தா, விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களில் வளாகங்களும் அமைக்கப்படவுள்ளன.

இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் துறைமுக நிர்வாகம், கடல்மைல் அறிவியல், கடல்சார் பொறியியல், வர்த்தக பள்ளி, கடல்சார் அறிவியல், கடல் துறை சட்டங்கள், கப்பல் வடிவமைப்பு மற்றும் கப்பல் கட்டுதல், உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து ஆ‌கிய 8 துறைகள் துவக்கப்படவுள்ளன . இந்த பிரிவுகளில் இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகள் வழங்கப்படவுள்ளது.

சீனாவில் உள்ள பாலிடன் கடல்சார் பல்கலைக்கழகத்துடன் இணைந்து துறைமுக நிர்வாகத்தில் எம்பிஏ பட்டமும், பெல்ஜியம் ஆன்ட்வெர்ப் பல்கலைக்கழகம் மற்றும் சீனாவின் டாலியன் கடல்சார் பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் இணைந்து சர்வதேச போக்குவரத்து மற்றும் லாஜிஸ்டிக்ஸ் மேலாண்மை படிப்பில் எம்.பி.ஏ., மால்டா பல்கலைக்கழகத்தின் சர்வதேச கடல்சார் சட்ட நிறுவனத்துடன் இணைந்து கடல்சார் சட்டத்தில் இளங்கலை படிப்பும், நெதர்லாந்து டெல்பிட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து தூர்வாருதலில் இளங்கலை படிப்பு ஆகியவையும் வழங்கப்படவுள்ளன.

இது தவிர பெங்களூரூ ஐ.ஐ.எம். உடன் இணைந்து முதுநிலை கடலோர அதிகாரிகளுக்கு நிர்வாகத்தில் சான்றிதழ் படிப்பும், ஐ.ஐ.எம். அகமதாபாத்துடன் இணைந்து கடல்சார் நிர்வாகத்தில் (அதிவிரைவு) எம்.பி.ஏ. பட்டமும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

செம்மஞ்சேரியில் உள்ள 300 ஏக்கர் நிலப்பரப்பில் பல்கலைக்கழகத்திற்கு 106 ஏக்கர் போக மீதியுள்ள 200 ஏக்கர் நிலத்தில் ரூ.1,500 கோடி செலவில் கடல்சார் வணிக வளாகம் அமைக்கப்படவுள்ளது. அரசு, தனியார் கூட்டு முயற்சியுடன் இந்த திட்டம் நிறைவேற்றப்படும்.
இந்த வளாகத்தில் அருங்காட்சியகம், கலைக்கூடம், கடல்வாழ் உயிரின வளர்ப்பு மையம், வணிக வளாகம், கேட்டரிங் கல்லூரி, 5 நட்சத்திர உணவகம், 15 ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் அமரக் கூடிய அளவுக்கு அதிநவீன மாநாட்டு கூடம் ஆகியவை அமைக்கப்படவுள்ளன.
பல்கலைக்கழகம், வணிக வளாகம் உள்ளிட்ட புதிய கட்டடப் பணிகள் வரும் 2010-க்குள் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தே‌சிய கட‌ற்படை அகாட‌மி இ‌ய‌க்குந‌ர் டாக்டர் பி. விஜயன் இந்திய கடல்சார் பல்கலைக்கழக துணைவேந்தராக ‌நிய‌மி‌க்க‌ப்‌ப‌‌ட்டு‌ள்ளா‌ர்.

இ‌ப்ப‌ல்கலை‌க் கழக‌த்து‌க்கான துவ‌க்க ‌‌விழா ம‌ற்று‌ம் க‌ட்டிட அடி‌க்க‌ல் நா‌ட்டு ‌விழா இ‌ன்று நடைபெ‌ற்றது. இ‌தி‌ல் முத‌ல்வ‌ர் கருணாந‌ி‌தி கல‌ந்து கொ‌ண்டு இ‌ந்‌திய கட‌ல்சா‌ர் ப‌ல்கலை‌க் கழக‌த்தை துவ‌க்‌கி வை‌த்து அடி‌க்க‌ல் நா‌ட்டினா‌ர்.

இ‌வ்‌விழா‌வி‌ல், மத்திய கப்பல், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் டி.ஆர். பாலு, மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை இணை அமைச்சர் ஜி.கே. வாசன், கப்பல் துறை செயலர் சர்மா மற்றும் ப‌ல்கலை‌க் கழக‌ துணைவே‌ந்த‌ர் ‌விஜய‌ன் உ‌ள்பட பல‌‌ர் கல‌ந்து கொ‌ண்டன‌ர்.