வ‌ிடுதலை‌ப்புலி ஆதரவாளர் கைது

புதன், 31 டிசம்பர் 2008 (13:09 IST)
செ‌ன்னை புறநக‌ர் பகு‌தி‌யி‌ல் பது‌ங்‌கி இரு‌ந்த ‌விடுதலை‌ப்பு‌லிக‌ள் ஆதரவாளரை ‌க்யூ ‌பி‌ரிவு காவ‌ல்துறை‌யின‌ர் நே‌ற்‌‌றிரவு கைது ச‌ெ‌ய்தன‌ர்.

செ‌ன்னை புறநக‌ர் பகு‌தியான செ‌ங்‌கு‌ன்ற‌த்த‌ி‌ல் உ‌ள்ள ஒரு ‌வீ‌‌ட்டி‌ல் பது‌ங்‌கி‌யிரு‌ந்த இலங்கையை சேர்ந்த திலீபன் (24) என்பவரை ‌கைது செ‌ய்த க்யூ பிரிவு காவ‌ல்துறை‌யின‌ர், அவரிடமிருந்து 3 சேட்டிலைட் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

விசாரணை‌யி‌ல், ஏ‌ற்கனவே ‌கைது செ‌ய்ய‌ப்ப‌ட்ட அந்தோணியிடம் கொடுக்க வந்ததும், ‌விடுதலை‌ப்புலி ஆதரவாளர் என்பது‌ம் தெரிய வ‌ந்தது.

இலங்கை யாழ்பாணத்தை சேர்ந்த அந்தோணி பரந்தாமன் என்பவரை கட‌ந்த ஞா‌யி‌‌ற்று‌க்‌கிழமை கைது செ‌ய்த ‌க்யூ பிரிவு காவ‌ல்துறை‌யின‌ர், அவரிடம் இருந்து 3 சாட்டிலைட் போன், 500 ‌கிலோ அமோனியம் நைட்ரேட் உள்ளிட்டவை பறிமுதல் செ‌ய்தன‌ர் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்