பொங்கல் பண்டிகையையொ‌ட்டி சிறப்பு ரயில்கள்

செவ்வாய், 30 டிசம்பர் 2008 (10:45 IST)
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னை எழும்பூர், சென்‌ட்ரல் ‌ர‌யி‌ல் நிலையங்களில் இருந்து சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

இது தொட‌ர்பாக தெ‌ற்கு ர‌யி‌ல்வே வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல், நாகர்கோவிலில் இருந்து, சென்னை சென்‌ட்ரலுக்கு, ஜனவ‌ரி 4 மற்றும் ஜனவ‌ரி 11 ஆகிய தேதிகளில் மாலை 4.30 மணிக்கு, புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 8.45 மணிக்கு சென்னை சென்‌ட்ரல் நிலையத்தை அடையும்.

அதுபோல், ஜனவ‌ரி 5 மற்றும் ஜனவ‌ரி 12 ஆகிய தேதிகளில், சென்னை சென்‌ட்ரல் நிலையத்தில் இருந்து பகல் 12.30 மணிக்கு சிறப்பு ரயில்கள் நாகர்கோவிலுக்கு புறப்பட்டு செல்கின்றன.

இந்த ரயில்கள், வள்‌‌ளியூர், நெல்லை, மணியாச்சி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி மற்றும் அரக்கோணம் மற்றும் பெரம்பூர் ஆகிய இடங்களில் நிற்கும்.

நாகர்கோவிலில் இருந்து, சென்னை எழும்பூருக்கு ஜன.5, 12, 19 மற்றும் 26 ஆகிய தேதிகளில் இரவு 7.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில்கள், மறுநாள் காலை 8.50 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.

இதுபோல், சென்னை எழும்பூர் நிலையத்தில் இருந்து, ஜன.6, 13, 20 மற்றும் 27 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில்கள், நாகர்கோவிலை மறுநாள் காலை 5.30 மணிக்கு சென்றடையும்.

இந்த ரயில்கள், வள்‌‌ளியூர், நெல்லை, மணியாச்சி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, தாம்பரம் மற்றும் மாம்பலம் ஆகிய இடங்களில் நிற்கும் எ‌ன்று தெ‌ற்கு ர‌யி‌ல்வே அ‌றி‌வி‌த்து‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்