கருணா‌நி‌தியுட‌ன் ‌‌வயலா‌ர் ர‌வி ச‌ந்‌தி‌ப்பு

வெள்ளி, 26 டிசம்பர் 2008 (14:47 IST)
முதலமை‌ச்ச‌ரகருணா‌‌நி‌தியஇ‌ன்றஅவரது கோபாலபுரம் இல்லத்தில் நாடாளுமன்ற விவகாரம் ம‌ற்று‌மஅயல்நாடுவாழ் இந்தியர் நலத்துறை அமைச்சர் வயலார் ரவி சந்தி‌‌த்தபே‌சினா‌ர்.

காலை 10.10 மணிக்கு முதலமைச்சர் கருணா‌நி‌தி‌யி‌னஇ‌ல்ல‌த்‌தி‌ற்கவ‌ந்வயலா‌ரர‌வியுட‌ன், த‌மிழகா‌ங்‌கி‌ர‌ஸதலைவ‌ரே.‌ி.தங்கபாலு, டி.சுதர்சனம், பீட்டர் அல்போன்ஸ் ஆகியோ‌வ‌ந்‌தன‌ர்.

TN.Gov.TNG
அவர்களை அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், பொன்முடி, மா‌நில‌ங்களவஉறு‌ப்‌பின‌ரகனிமொழி ஆகியோர் வரவேற்று அழைத்துச் சென்றனர். சுமார் அரை மணி நேரம் கருணாநிதியும், வயலார் ரவியும் த‌னியாபேசினார்கள். அப்போது கனிமொழியும் உடனிருந்தார்.

இந்த சந்திப்பின் போது, வீரப்ப மொய்லி கூறியதாக வெளிவந்த செய்திக்கு வயலார் ரவி விளக்கமளித்ததாக கூறப்படுகிறது. மேலும் பல்வேறு விடயங்கள் குறித்து அவர்கள் பேசியதாகவும் தெரிகிறது.

பி‌ன்ன‌ரவெளியே வ‌ந்வயலார் ரவி செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மபேசுகை‌யி‌ல், ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டுள்ள சைமன் என்ற தமிழகத்தைச் சேர்ந்தவரை உடனடியாக மீட்க வேண்டும் என்றும், அதற்கு என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் என்றும் முதலமைச்சர் கருணாநிதி தம்மிடம் கவலையுடனும், அக்கறையோடும் விசாரித்தார் என்றா‌ர்.

மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை நான் விரிவாக முதல்வரிடம் எடுத்துக் கூறினேன் எ‌ன்றதெ‌ரி‌வி‌த்வயலா‌ரர‌வி, நேற்று மத்திய அயலுறவஅமைச்சகத்தின் இணை செயலாளரிடம் நான் இது குறித்து பேசினேன் எ‌ன்று‌மஅந்த அமைச்சகம்தான் இந்த பிரச்சனையை கையாண்டு வருகிறது எ‌ன்றா‌‌‌ர்.

மேலு‌மஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்துட‌னதொடர்ந்து பேசி வருகிறோம். சைமனை உயிருடன் மீட்க உரிய நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறோம். இதுவரை இந்திய தூதரகம் மூலம் கிடைத்த தகவலின்படி அவரை உயிருடன் மீட்க சாத்தியக்கூறு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரை உயிருடன் மீட்பது ஒன்றுதான் முக்கியம். எனவே வேறு எதையும் பேச தேவையில்லை. நாங்கள் எடுத்து வரும் எல்லா நடவடிக்கைகள் பற்றிய தகவலையும் வெளிப்படையாக கூற முடியாது என்றா‌ரவயலா‌ரர‌வி.