‌விவசா‌யிக‌ள் போர‌ா‌ட்ட‌த்‌தி‌ற்கு இ‌ந்‌திய க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் ஆதரவு

வெள்ளி, 26 டிசம்பர் 2008 (10:35 IST)
வெள்ள நிவாரண தொகையை அதிகரிக்கக்கோரி ஜனவ‌ரி 2ஆ‌ம் தே‌தி ‌விவசா‌யிக‌ள் நட‌த்து‌ம் உண்ணாவிரத போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆதரவு அளிப்பதாக அ‌க்க‌ட்‌சி‌யி‌ன் மா‌நில செயல‌ர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.

webdunia photoFILE
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில நிர்வாக குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இ‌ந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான‌‌ங்க‌ளி‌ல், நெற்பயிர்களை இழந்து, தங்களின் எதிர்காலம் குறித்து நம்பிக்கையின்றி அச்சத்திலும், துயரத்திலும் உள்ள விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் நிவாரணம் என்று அரசு அறிவித்திருப்பது மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது எ‌ன்று தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

மேலு‌ம், மத்திய ஆட்சியில் அங்கம் பெறுவதுடன் மிகுந்த செல்வாக்குடன் உள்ள மாநில அரசு, மத்திய ஆட்சியில் உள்ள தனது செல்வாக்கை முழு அளவில் பயன்படுத்தி மத்தியக் குழுவின் அறிக்கையினை விரைவாக பெறவும், சேத இழப்புக்களை ஈடு செய்யத்தக்க வகையில் தேவையான நிதியினை பெறவும் உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

காவிரி பாசன மாவட்டங்களை வெள்ள சேதத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவித்து, அரசிதழில் வெளியிட்டு தேசிய பேரிடராக கருதி மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து நிவாரணப்பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு நம்பிக்கை இழந்துள்ள மக்களுக்கு நம்பிக்கையூட்டக்கூடிய முறையில் செயல்பட வேண்டும்.

மழை வெள்ளத்திற்கு நிரந்தரத்தீர்வாக, சிறப்பு பெரும் திட்டத்தை (மாஸ்டர் பிளான்) அதனை மிகுந்த நேர்மையுடன், உரியவர்களை கொண்டு செயல்படுத்திடவும் அரசு ஆவண செய்திடல் வேண்டும்.

விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் சங்கங்களின் சார்பில் கடலூர், திருவாரூர், நாகை, தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களின் ஜனவரி 2ஆ‌ம் தேதி நடைபெறும் உண்ணாவிரதத்திற்கு ஆதரவை தெரிவித்துக்கொள்கிறது எ‌ன்று ‌தீ‌ர்மான‌ங்க‌ள் ‌நிறைவே‌ற்ற‌ப்‌ப‌ட்டு‌ள்ளது எ‌‌ன்று அ‌க்க‌ட்‌சி‌யி‌ன் மா‌நில செயல‌ர் தா.பா‌ண்யடி‌ன் தெ‌‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.