இன்சூரன்ஸ் ஊழியர்க‌ள் வேலை ‌நிறு‌த்த‌த்‌தி‌ற்கு மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் ஆதரவு

செவ்வாய், 23 டிசம்பர் 2008 (10:48 IST)
இன்சூரன்ஸ் ஊழியர்கள் நடத்தும் வேலைநிறுத்தத்துக்கு மார்க்சிஸ்ட் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி ஆதரவு அளிக்கும் என்று அ‌க்க‌ட்‌சி‌யி‌ன் மா‌நில செயல‌ர் என்.வரதராஜன் தெரிவித்துள்ளார்.

webdunia photoFILE
இது தொட‌ர்பாக அவ‌ர் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், இன்சூரன்ஸ் துறையில் அன்னிய மூலதனத்திற்கான உச்சவரம்பை 26 ‌விழு‌க்கா‌ட்டி‌ல் இரு‌ந்து 49 ‌விழு‌க்காடாக உயர்த்தும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆயுள் காப்பீட்டுக் கழகம் மற்றும் பொதுகாப்பீட்டு நிறுவன ஊழியர்களும், அதிகாரிகளும் இன்றும் நாளையும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள். இந்த போராட்டத்திற்கு மாநில செயற்குழு ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது.

தமிழ்நாட்டில் சமீபத்தில் ஏற்பட்ட புயல் வெள்ளத்தால் ஏற்பட்ட கடுமையான பாதிப்புகளை ஈடுசெய்யும் வகையில் தமிழக அரசின் நிவாரண உதவிகள் அமையவில்லை.

பல்வேறு கோரிக்கைகளை வற்புறுத்தி விவசாயிகள், விவசாய தொழிலாளர் சங்கங்கள் சார்பில் 2009 ஜனவரி 2ஆம் தேதி 1000 மையங்களில் உண்ணாவிரதம் நடைபெறுகிறது. இந்த போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரவு தெரிவிக்கிறது எ‌ன்று வரதராஜ‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.