தேர்தல் பணிக்குழுவில் இருந்து மு.க.அழ‌கி‌‌ரி விலக‌ல்

ஞாயிறு, 21 டிசம்பர் 2008 (15:37 IST)
திரும‌ங்கல‌ம் இடை‌த்தே‌‌ர்த‌லி‌ல் ‌தி.மு.க. சா‌ர்‌‌பி‌ல் போ‌ட்டி‌யிடு‌ம் வே‌ட்பாள‌ர் லதா அ‌தியமானை அ‌றிமுக‌‌ப்படு‌த்து‌ம் கூ‌‌ட்ட‌த்‌தி‌ல் பே‌சிய மு.க.அழ‌‌கி‌ரி, க‌ண் அறுவை ‌சி‌‌கி‌ச்சை செ‌ய்ய இரு‌ப்பதா‌ல் தே‌ர்த‌ல் ப‌‌ணி‌க்குழு தலைவ‌ர் பத‌வி‌யி‌ல் ‌விலகு‌கிறே‌ன் எ‌ன்று தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

webdunia photoFILE
திருமங்கலம் தொகுதி தி.மு.க. வேட்பாள‌ர் அற‌ிமுக கூ‌ட்ட‌ம் திருமங்கலத்தில் உள்ள வி.எஸ்.ஆர். திருமண மண்டபத்தில் இன்று நடைபெ‌ற்றது. வேட்பாளரை அறிமுகப்படுத்துவதற்காக அமைச்சர் மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி ஆகியோர் ஒரே காரில் மதுரையில் இருந்து திருமங்கலம் வந்தனர்.

பின்னர் தேவர் சிலைக்கு மாலை அணிவித்த 2 பேரும் கூட்டம் நடக்கும் மண்டபத்துக்கு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டனர். அங்கு இருவரு‌ம் தி.மு.க. வேட்பாளர் லதா அதியமானை அறிமுகம் செய்து வைத்தனர்.

அ‌ப்போது பே‌சிய மு.க.அழ‌கி‌ரி, கண் அறுவை ‌சி‌கி‌ச்சை செய்ய இருப்பதால் நா‌ன் தேர்தல் பணிக்குழு தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன் எ‌ன்று‌ம் அந்த பொறுப்பை அமைச்சர் ஐ.பெரியசாமி கவனிப்பார் என்று‌ம் தெ‌‌ரி‌வி‌த்தா‌ர்.