திருமங்கலம் இடை‌த்தே‌ர்த‌லி‌ல் புதிய தமிழகம் போட்டி‌யில்லை : கிருஷ்ணசாமி

சனி, 20 டிசம்பர் 2008 (18:22 IST)
திரும‌ங்கல‌ம் தொகு‌தி இடை‌த்தே‌ர்த‌லி‌ல் பு‌திய த‌மிழக‌ம் க‌ட்‌சி போ‌ட்டி‌யிட‌‌ப் போவ‌தி‌ல்லை எ‌ன்று‌ம் ஆதரவு யா‌ரு‌க்கு எ‌ன்பது கு‌றி‌த்து உ‌ரிய நேர‌த்‌தி‌ல் அ‌றி‌வி‌ப்போ‌ம் எ‌ன்று‌ம் அ‌க்க‌ட்‌சி‌‌யி‌ன் தலைவ‌ர் ‌கிரு‌ஷ்ணசா‌மி தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
செ‌ன்னை‌யில இ‌ன்று செ‌ய்‌தியாள‌ர்களு‌க்கு‌ப் பே‌ட்டிய‌ளி‌த்த அவ‌ர், "இடைத்தேர்தல் என்றாலே பணபலம் மட்டும் தீர்மானிக்கும் சக்தியாக மாறி விட்ட சூழலில் திருமங்கலம் தொகுதியும் அதற்கு விதிவிலக்காக இருக்காது" என்றா‌ர்.

ஆகையா‌ல், திருமங்கலம் சட்ட‌ப்பேரவை‌த் தொகுதி இடை‌த்தே‌ர்த‌லி‌ல் புதிய தமிழகம் கட்சி போட்டியிடுவதில்லை என்று முடிவு செய்து இருக்கிறது எ‌ன்று‌ம் புதிய தமிழகம் கட்சியினர் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை தக்க நேரத்தில் அறிவிப்போம் எ‌ன்று‌ம் ‌கிரு‌ஷ்ணசா‌மி கூ‌றினா‌ர்.