‌திரும‌ங்கல‌ம் : அ.இ.அ.‌தி.மு.க. வே‌ட்பாளரை ஆத‌ரி‌த்து க‌ம்யூ. பொதுக்கூட்டம் அறிவிப்பு

சனி, 20 டிசம்பர் 2008 (17:54 IST)
திரு‌ம‌ங்கல‌மதொகு‌தி இடை‌த்தே‌ர்த‌லி‌ல் அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் முத்துராமலிங்கத்தை ஆதரித்து வரு‌ம் 27ஆ‌ம் தேதி திருமங்கலத்தில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறு‌‌கிறது எ‌ன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு க‌ட்‌சி‌யி‌ன் மாநில செயலர் என்.வரதராஜன் அற‌ி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
இதுகு‌றி‌த்து அவ‌ர் இ‌ன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருமங்கலம் சட்ட‌ப்பேரவை தொகுதிக்கு நடைபெற உள்ள இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் ப.முத்துராமலிங்கத்தை ஆதரிப்பது என்ற முடிவின் அடிப்படையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தன்னுடைய தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளது.

இடைத்தேர்தலையொட்டி, மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் சிறப்பு பேரவைக் கூட்டம் 24ஆ‌ம் தேதி நடைபெற உள்ளது. இதில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர். அ.தி.மு.க. வேட்பாளர் ம.முத்துராமலிங்கத்தை ஆதரித்து 27ஆ‌ம் தேதி திருமங்கலத்தில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

இந்த பொதுக்கூட்டத்தில் கட்சியின் மாநில செயலாளர் என்.வரதராஜன், பி.சம்பத், ஏ.லாசர், வெ.சுந்தரம், பி.மோகன் எம்.பி, நன்மாறன் எம்.எல்.ஏ., ஆர்.அண்ணாத்துரை ஆகியோர் பங்கேற்று உரையாற்ற உள்ளனர்" எ‌ன்றவரதராஜன் கூ‌றியு‌ள்ளா‌ர்.