ஜனவ‌ரி 1ஆ‌ம் தே‌தி முத‌ல் முடிதிருத்த‌ம் க‌ட்டண‌ம் உய‌ர்வு

வியாழன், 18 டிசம்பர் 2008 (10:10 IST)
த‌மிழக‌ம் முழுவது‌ம் ஜனவரி 1ஆ‌ம் தேதி முதல் முடிதிருத்தும் கட்டணம் 50 ரூபாயாக உயர்கிறது எ‌ன்று தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்க‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

இது தொட‌ர்பாக ச‌ங்க‌த் தலைவர் எம்.நடேசன், மாநிலப் பொதுச் செயலாளர் எம்.ஜி.பாக்கியநாதன் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், பொருட்களின் விலைவாசி உயர்வை முன்னிட்டு ஜனவரி 1ஆ‌ம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து முடிதிருத்தும் நிலையங்களிலும் கட்டணம் உயர்த்தப்படுகிறது.

பொதுமக்கள் அனைவரும் இந்த கட்டண உயர்வுக்கு ஆதரவு தந்து முடிதிருத்தும் தொழிலாளிகளின் முன்னேற்றத்திற்கு ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டுகிறோம்.

உயர்த்தப்பட்ட கட்டண விவரம் : உயர்த்தப்பட்ட கட்டணம் ரூபாயில் - சாதாரண சலூன் - ஏ.சி. சலூன்

முடிதிருத்துதல் மட்டும் 50ரூபாய்-60 ரூபாய், முகமழித்தல் மட்டும் 25-30, ஸ்பெஷல் முகமழித்தல் 30-35, சிறுவர் முடிதிருத்துதல்40-50, சிறுமி முடிதிருத்துதல் 50, 55, தாடி ஒதுக்குதல் 30-40, தலை கழுவுதல் (ஷாம்புடன்) 30-35, முடி உலர்த்துதல் 30-35, தலை ஆயில் மஜாஜ் 100-120, வெள்ளை முடியை கறுப்பாக்குதல் 150-175, பேஸ் பிளீச்சிங் 250-300, பேஷியல் 300-400, ஹேர் கலரிங் 350-400, ஹேர் ஸ்ரெட்டனிங் 800-1,000 மேற்கண்டவாறு கட்டணங்கள் உயர்த்தப்பட்டிருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்