இடஒது‌க்‌கீ‌ட்டி‌ல் வருமான வர‌ம்பை ஏ‌ற்ப‌தி‌ல்லை: கருணாநிதி

செவ்வாய், 16 டிசம்பர் 2008 (14:05 IST)
ம‌த்‌திய அர‌சி‌ன் உய‌ர் க‌ல்வ‌ி ‌நிறுவன‌‌ங்க‌ளி‌ல் இடஒதுக்கீட்டை பொறுத்தவரை வருமான வரம்பை தி.ு.க எப்போதும் ஏற்றுகொண்டதில்லை எ‌ன்று‌மதிராவிட இயக்கத்தை பொறுத்தவரை வகுப்புவாரி பிரதிநிதி, சமூகநீதி அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உரிய சலுகைகள் போய் சேர வேண்டும் என்பதுதான். அதற்காகத்தான் நாங்கள் பாடுபட்டு வருகிறோம் எ‌ன்று‌ம் முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி கூ‌றினா‌ர்.

webdunia photoFILE
சென்னை அ‌ண்ணா அ‌றிவாலய‌த்த‌ி‌ல் இன்று நடைபெற்ற தி.ு.க உயர்நிலை செயல் திட்ட‌க்குழு கூட்டத்திற்கு பிறகு முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி செ‌‌ய்‌தியாள‌ர்களு‌க்கு பே‌ட்டி அ‌ளி‌த்தா‌ர். அ‌ப்போது, நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் 3வது அணி அமையும் என்று கூறிய இடதுசாரிகள் இப்போது திருமங்கலத்தில் அ.இ.அ.ி.ு.க.வுக்கு ஆதரவு அளித்து‌ள்ளதே எ‌ன்று கே‌ட்டத‌ற்கு, இதற்கு நானென்ன பதில் சொல்வது எ‌ன்றா‌ர்.

உச்ச நீதிமன்றத்தில் இடஒதுக்கீடு வழக்கில் உச்சவரம்பு தொடர்பாக தலைமை நீதிபதி ஒருசில கருத்துக்களை தெரிவித்துள்ளாரே? எ‌ன்று கே‌‌ட்டபோது, இடஒதுக்கீட்டை பொறுத்தவரை வருமான வரம்பை தி.ு.க எப்போதும் ஏற்றுகொண்டதில்லை எ‌ன்று‌ம் ி.ு.க மட்டுமல்ல, திராவிட இயக்கத்தை பொறுத்தவரை வகுப்புவாரி பிரதிநிதி, சமூகநீதி அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உரிய சலுகைகள் போய் சேர வேண்டும் என்பதுதான். அதற்காகத்தான் நாங்கள் பாடுபட்டு வருகிறோம் எ‌ன்று ப‌‌தி‌ல் அ‌ளி‌த்தா‌ர் கருணா‌நி‌தி.

தி.மு.க. பொதுக் குழுவில் முக்கிய பதவி மாற்றங்கள் இருக்குமா? எ‌ன்று செ‌ய்‌தியாள‌ர்க‌ள் கே‌ட்டத‌ற்கு, பொதுக்குழு கூடிய பிறகு தெரியும் எ‌ன்றா‌ர்.

மு.க.ஸ்டாலினுக்கு புதிய பொறுப்பு வழங்கப்படுமா? எ‌ன்ற ம‌ற்றொரு கே‌ள்‌வி‌‌க்கு ப‌தி‌ல் அ‌ளி‌த்த முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி, பொதுக்குழு கூடட்டும் எ‌ன்றா‌ர்.

மங்களூர் இடைத்தேர்தலை நடத்தாமல் திருமங்கலம் தேர்தலை நடத்த நீங்கள்தான் காரணம் என்று வைகோ கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளாரே எ‌ன்று கே‌ட்டபோது, இதுபற்றி நான் விளக்கமாக பதில் கூறி இருக்கிறேன் எ‌ன்று தெ‌‌ரி‌வி‌த்த கருணா‌நி‌தி, செல்வப்பெருந்தகை ‌விலக‌ல் கடிதத்தை முறைப்படி கொடுக்காததால் அந்த தொகுதி காலி என்று அறிவிக்கப்படவில்லை. எனவே அங்கு தேர்தல் நடத்த வாய்ப்பு இல்லை எ‌ன்றா‌ர்.

தமிழக அமை‌ச்சரவை‌யி‌ல் மாற்றம் வருமா? எ‌ன்ற கே‌ள்‌வி‌‌க்கு, வரும்போது வரும் எ‌ன்று ப‌தி‌ல் அ‌ளி‌த்தா‌ர் கருணா‌நி‌தி.

பிரணாப் முகர்ஜி இலங்கை செல்ல வற்புறுத்தினீர்கள் எ‌ன்று செ‌ய்‌தியா‌ள‌ர்க‌ள் கே‌ட்டபோது, ம‌த்‌திய அமை‌ச்ச‌ர் டி.ஆர்.பாலு இன்று டெல்லி சென்று இந்த கருத்தை வலியுறுத்த உள்ளார் எ‌ன்று‌ம் அதன் பிறகு பிரணாப் முகர்ஜி இலங்கை செல்லும் தேதி தெரியும் எ‌ன்றா‌ர்.