திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது குறித்து கட்சியின் பொதுக்குழுவை கூட்டி முடிவு எடுக்கப்படும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறினார்.
webdunia photo
FILE
பண்ருட்டியில் நடந்த திருமண விழாவில் கலந்துகொண்டு பேசிய பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், குடிப்பழக்கம் இல்லாத மாநிலமாக தமிழகம் உருவாக வேண்டும். ஆண்கள் குடிப்பதால் பெண்கள் அதிக பாதிப்பு அடைகின்றனர்.
தை 1ஆம் தேதி முதல், மது இல்லாத மாநிலமாக தமிழகம் இருக்க நடவடிக்கை எடுக்க கோரி, முதல்வர் கருணாநிதியை வரும் 22ஆம் தேதி சந்தித்து கோரிக்கை மனு அளிக்க உள்ளோம் என்றார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்கள் அவரிடம், திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் இணைந்து செயல்படுவீர்களா? என்று கேட்டதற்கு, 'கட்சியின் செயற்குழு, பொதுக்குழு கூட்டப்பட்டு அதில் எடுக்கப்படும் முடிவின்படி செயல்படுவோம். என்றார்.