சிதம்பரத்தில் 17 செ.மீ மழை!
திங்கள், 15 டிசம்பர் 2008 (17:10 IST)
தமிழகத்தில் நேற்று சில இடங்களில் பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 17 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
இதனிடையே அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களான ராமநாதபுரம், கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணத்திலும், புதுச்சேரியிலும் ஆங்காங்கே பலத்த மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நேற்று பெய்த மழை அளவு செ.மீட்டரில் வருமாறு:
கடலூர் மாவட்டம் அண்ணாமலைநகர் 13, நாகப்பட்டிணம் 12, மயிலாடுதுறை 9, கடலூர் மாவட்டம் புவனகிரி, சேத்தியாதோப்பு, காட்டுமன்னார்கோவில் ஆகிய இடங்களில் தலா 7.
தஞ்சாவூர் 6, கும்பகோணம், ஒரத்தநாடு, பாபநாசம், திருவிடைமருதூர், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, நாகப்பட்டிணம், தரங்கம்பாடி ஆகிய இடங்களில் தலா 5, காரைக்கால், பட்டுக்கோட்டை, பேராவூரணி, திருத்துறைபூண்டி ஆகிய இடங்களில் தலா 4.
கடலூர் மாவட்டம் அதிராம்பட்டிணம், ஸ்ரீமுஷ்ணம், தஞ்சாவூர் மாவட்டம் முடக்கூர், திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை, வலங்கைமான், நன்னிலம், புதுக்கோட்டை மாவட்டம் கரம்பகுடி, திருச்சி மாவட்டம் மருங்காபுரி ஆகிய இடங்களில் தலா 3.
கடலூர், திருவாரூர் மாவட்டம் திருவையாறு, கொடவாசல், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி, இழுப்பூர், கந்தார்வகோட்டை, கிரனூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஆகிய இடங்களில் தலா 2.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம், தஞ்சாவூர் மாவட்டம் கல்லணை, திருக்காட்டுப்பள்ளி, திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம், புதுக்கோட்டை மாவட்டம் வேதாரண்யம், திருமயம், ராமநாதபுரம், திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு, பாளையங்கோட்டை, கோவை மாவட்டம் உடுமலைபேட்டை, ஈரோடு மாவட்டம் தாராபுரம், மூலனூர், கரூர் மாவட்டம் தோகைமலை, திருச்சி மாவட்டம் லால்குடி, மானாமதுரை, புல்லம்பாடி, திருவையாறு, சமயபுரம், திருச்சி, திருச்சி விமான நிலையம், சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை, காரைக்குடி, திண்டுக்கல் மாவட்டம் சத்திராபட்டி, நத்தம், கொடைக்கானல் ஆகிய இடங்களில் தலா 1.
அடுத்த இரண்டு நாட்களில் தமிழகத்தின் கடலோர பகுதிகளிலும், புதுச்சேரியிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.