பணிக் காலத்தில் இறந்தவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் 87 பேருக்கு பணி நியமன ஆணைகளை உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.
TN.Gov.
TNG
தி.மு.க அரசு தமிழகத்தில் மீண்டும் பொறுப்பேற்றப் பிறகு அரசுப் பணியில் நேரடி நியமனத்திற்கு இருந்த தடை நீக்கப்பட்டது. கருணை அடிப்படையில் நியமனம் செய்வதற்கு இருந்த தடையும் நீக்கப்பட்டது.
கருணை அடிப்படையில் நியமனம் செய்ய அரசு உத்தரவிட்டதற்கு இணங்க பணி இடைக்காலத்தில் இயற்கை எய்திய பணியாளர்களின் வாரிசுகளிடம் இருந்து 30.9.2008 வரையில் பெறப்பட்ட மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு இன்று இளநிலை உதவியாளர், வருவாய் உதவியாளர், தட்டச்சர்கள் உள்ளிட்ட 83 பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகளை அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
அத்துடன் 4 மயான பணியாளர்களுக்கு மயான உதவியாளர் பணியிடத்தில் கால ஊதிய ஏற்ற முறையில் பணியமர்த்த வழங்கப்படும் ஆணைகளையும் ஸ்டாலின் வழங்கினார்.
பணியாணை பெற்ற அனைவருக்கும் தனிப்பட்ட முறையில் பணியில் கடமை உணர்வோடு செயல்பட கேட்டுக் கொள்ளும் தன் கையொப்பமிட்ட வாழ்த்து கடிதங்களையும் ஸ்டாலின் வழங்கினார் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.