புது‌ச்சே‌ரி‌யி‌ல் நாளை ஆ‌ர்‌ப்பா‌‌ட்ட‌ம்: ஜெய‌ல‌லிதா

புது‌ச்சே‌ரி‌யி‌ல் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க வ‌லியுறு‌த்‌தி அ.இ.அ.ி.ு.க சார்பில் நாளை ச‌ட்ட‌ப்பேரவை அரு‌கி‌ல் க‌ண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறு‌ம் என்று அக்கட்சியின் பொதுச்செயலர் ஜெயலலிதா தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
இது தொடர்பாக அவர் இ‌ன்று வெளியிட்டுள்ள அறிக்கை‌யி‌ல், அண்மையில் பெய்த தொடர்மழை, புயலின் காரணமாக புதுச்சேரி, காரைக்கால் பகுதிகள் வெகுவாக பாதிக்கப்பட்டன. நகர கட்டமைப்பு வசதிகள் சரி செய்யப்படாததன் காரணமாக கழிவுநீர் வாய்க்கால் மூலம் கடலில் கலக்க வேண்டிய மழை நீர், நகர, கிராமப் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்குள் புகுந்து அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பெருத்த சேதாரத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும்,ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்ட பயிர்கள் நாசமடைந்து உள்ளதாகவும், உயிரிழப்பு, வேலை இழப்பு ஆகியவை ஏற்பட்டுள்ளதாகவும் புதுச்சேரி மாநில மக்கள் தெரிவிக்கின்றனர்.

புதுச்சேரி மாநிலத்தை புயல் பாதித்த மாநிலமாக அறிவித்த அரசு, நிவாரண உதவியாக முற்றிலும் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு 2 ஆயிரம் ரூபாயும், பாதியளவு பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என்று அறிவித்திருப்பது மக்கள் மத்தியில் பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. காங்கிரஸ் அரசின் இது போன்ற செயலுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

எனவே மக்களை ஏமாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் புதுச்சேரி மாநில காங்கிரஸ் அரசைக் கண்டித்தும், பெருமழை, புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து குடிசை வீடுகளுக்கும் தலா 10 ஆயிரம் ரூபாயும், தண்ணீரால் சூழப்பட்ட அனைத்து வீடுகளுக்கும் தலா 3 ஆயிரம் ரூபாயும், உயிரிழந்த நபர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 15 ஆயிரம் ரூபாயும், பாதிக்கப்பட்ட விவசாய விளை நிலங்களுக்கு ஏக்கருக்கு 5 ஆயிரம் ரூபாயும் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், விவசாயக் கடன், நிலவரி உள்ளிட்ட அனைத்து வரிகளையும் ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் புதுச்சேரி மாநில அ.இ.அ.ி.ு.க சார்பில் நாளை (14ஆ‌ம் தேதி) காலை 10 மணி‌க்கு புதுச்சேரி சட்ட‌ப்பேரவை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் எ‌ன்று ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.