உளுந்தூர்பேட்டை அருகே அரசு - த‌னியா‌ர் பேரு‌ந்துக‌ள் மோதல்: 3 பேர் பலி; 40 பே‌ர் படுகாயம்

சனி, 13 டிசம்பர் 2008 (12:43 IST)
விழு‌ப்புர‌ம் மாவ‌ட்ட‌ம் உளு‌ந்தூ‌ர்பே‌ட்டை‌ அருகே இ‌ன்று அ‌திகாலை அரசு பேரு‌ந்து‌ம், த‌னியா‌‌ர் பேரு‌ந்து‌ம் நேரு‌க்கு நே‌ர் மோ‌தி‌க் கொ‌ண்ட ‌விப‌த்‌தி‌ல் ஓ‌ட்டுன‌ர் 2 பே‌ர் உ‌ள்பட 3 பே‌ர் ‌நிக‌ழ்‌விட‌த்‌திலேயே ப‌லியானார்க‌ள். மேலு‌ம் 40 பய‌ணிக‌ள் படுகாய‌ம் அடை‌ந்தன‌ர்.

திருச்சியில் இருந்து நே‌ற்‌றிரவு 35 பய‌ணிகளுட‌ன் அரசு பேரு‌ந்து ஒ‌ன்று விழுப்புரம் நோக்கி புறப்பட்டது. இன்று அதிகாலை 4.45 மணி‌க்கு உளுந்தூர்பேட்டை அருகே பில்லூர் எ‌ன்ற ‌கிராம‌ம் அருகே அரசு பேரு‌ந்து வ‌ந்து கொ‌ண்டிரு‌ந்தது.

அ‌ப்போது, மு‌ன்னா‌ல் செ‌ன்ற பேரு‌ந்து ஒ‌ன்றை மு‌ந்‌தி‌ச் செ‌ல்ல அரசு பேரு‌ந்து முய‌ன்றது. அப்போது, சென்னையில் இருந்து திருச்சி நோக்கி வ‌ந்த தனியார் பேரு‌ந்து, அரசு பேரு‌ந்துட‌ன் நேருக்கு நேர் மோதியது.

இ‌ந்த ‌விப‌த்‌தி‌ல் இர‌ண்டு பேரு‌ந்துகளு‌ம் அப்பளம் போல் நொறுங்கியது. இ‌தி‌ல் தனியார் பேரு‌ந்து ஓ‌ட்டுன‌ர்க‌ள் ஆசாத், ஆல்பா, அரசு பேரு‌ந்‌தி‌ல் பயண‌ம் செ‌ய்த ‌விஜய‌ன் ஆகியோர் உடல் நசுங்கி ‌நிக‌ழ்‌விட‌த்‌திலேயே ப‌லியானா‌ர்க‌ள்.

மேலு‌ம் இர‌ண்டு பேரு‌ந்துக‌ளி‌ல் பயண‌ம் செ‌ய்த 40 பேர் படுகாயம் அடைந்தனர். அவ‌ர்க‌ள் அனைவரு‌ம் உ‌ளு‌ந்தூ‌ர்பே‌ட்டை அரசு மரு‌த்துவமனை‌யி‌ல் அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

இ‌ந்த விபத்து குறித்து உளுந்தூர்பேட்டை காவ‌ல்துறை‌யின‌ர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி‌ன்றன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்