சென்னை சென்ட்ரலில் இருந்து கோவைக்கு சிறப்பு ரயில்
சனி, 13 டிசம்பர் 2008 (10:17 IST)
சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று இரவு 11.45 மணிக்கு கோவைக்கு சிறப்பு ரயில் (0621) இயக்கப்படுகிறது என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
சென்ட்ரலில் இருந்து கொச்சிவேலிக்கு 3 நாட்களுக்கு ஒரு சிறப்பு ரயில் (0657) இயக்கப்படுகிறது. இந்த ரயில் டிசம்பர் 31, ஜனவரி 2, 5, 7, 9, 12, 14, 16ஆம் தேதிகளில் பிற்பகல் 3.15 மணிக்கு புறப்படும்.
மறுமார்க்கமாக (0658) கொச்சிவேலியில் இருந்து ஜனவரி 1, 3, 6, 8, 10, 13, 15, 17ஆம் தேதிகளில் காலை 11 மணிக்கு சென்ட்ரல் புறப்படும். சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை தொடங்கும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.