இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், திருவண்ணாமலைக்கு கார்த்திகை தீபம் தொடர்பான பாதுகாப்பு பணிக்காக திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து சென்ற தமிழ்நாடு காவல்துறை தலைமை காவலர் சந்திரன் இன்று இயற்கை எய்தினார்.
இதையொட்டி அவரது குடும்பத்திற்கு முதலமைச்சர் கருணாநிதி தனது இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன் இறந்த காவலர் குடும்பத்துக்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சம் உடனடியாக வழங்கிடவும், அவரது வாரிசுதாரர் ஒருவருக்கு அரசுப்பணி அளித்திடவும் ஆணையிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.