முத‌ல்வ‌ரிட‌ம் அறிக்கை வழங்கியது தமி‌ழ்ப் பல்கலைக்கழகச் சீரா‌ய்வுக்குழு

வியாழன், 11 டிசம்பர் 2008 (16:06 IST)
செம்மொழித் திட்டத்தின் கீ‌ழ் நிதி ஆதாரங்களைப் பெறுதல் போன்றவை குறித்து, விரிவாக ஆ‌ய்வு செ‌ய்து அறிக்கை தயாரித்த தமி‌ழ்பபல்கலைக்கழகச் சீரா‌ய்வுக்குழு அ‌ந்த அறிக்கையினை முத‌ல்வ‌ரகருணா‌நி‌தி‌யிட‌மஇன்று வழ‌ங்‌கியது.

தமி‌ழ்மொழிக்கு மத்திய அரசின் செம்மொழி அறிந்தேற்பும், செம்மொழித் தமிழா‌ய்வு மத்திய நிறுவனமும் கிடைத்துள்ள நிலையில் தமி‌ழ்ப் பல்கலைக் கழகத்தின் பணிகளை முனைப்புடன் செயற்படுத்திட பேராசிரியர் மு.அனந்தகிருட்டிணன் தலைமையில் சிலம்பொலி சு.செல்லப்பன், தமி‌ழ் வளர்ச்சி, செ‌ய்தி, அறநிலையத்துறைச் செயலாளர் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட குழு கடந்த ஆண்டு அமைக்கப்பட்டது.

இக்குழு தமி‌ழ்ப் பல்கலைக்கழகத்தில் புதிய துறைகள், மையங்களை உருவாக்குதல், மறுசீரமைப்பு செ‌ய்தல், மேம்படுத்துதல், கல்விநிலைப் பணியாளர்கள், அலுவல்நிலைப் பணியாளர்களின் எண்ணிக்கையை வரையறை செ‌ய்தல், அடுத்த பத்தாண்டுகளுக்கான எதிர்காலச் செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்திடல், முறைப்படுத்தப்படாத பணியிடங்களை முறைப்படுத்துதல், செம்மொழித் திட்டத்தின் கீ‌ழ் நிதி ஆதாரங்களைப் பெறுதல் போன்றவை குறித்து, விரிவாக ஆ‌ய்வு செ‌ய்து அறிக்கை தயாரித்துள்ளது.

அவ்வறிக்கையினை இன்று முத‌ல்வ‌ரகருணா‌நி‌தி‌யிட‌ம், குழுவின் தலைவர் மு.அனந்தகிருட்டிணன் வழங்கினார். அ‌ப்போது குழு உறுப்பினர் முனைவர் சிலம்பொலி சு.செல்லப்பன், தமி‌ழ்ப்பல்கலைக்கழகத் துணைவேந்தர் ம.இராசேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர் எ‌ன்று த‌மிழக அரசு வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்த‌ி‌க்கு‌றி‌ப்‌பி‌ல் தெ‌ரிவ‌ி‌‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்