பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பாரபட்சமின்றி நிதியுதவி: சர‌த்குமா‌ர்

வியாழன், 11 டிசம்பர் 2008 (11:55 IST)
வெ‌ள்ள‌த்தா‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்ட ‌விவசா‌யிகளு‌க்கு பாரப‌ட்ச‌மி‌ன்‌றி த‌மிழக அரசு ‌நி‌தியுத‌வி வழ‌ங்க வே‌ண்டு‌‌ம் எ‌ன்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
இது தொட‌ர்பாக அவ‌ர் வெளியிட்டு‌ள்ள அறிக்கை‌யி‌ல், வெள்ள நிவாரண உதவி வழங்குவதில் பல நிபந்தனைகள் இருப்பதால் உண்மையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு போய் சேரவில்லை. வீட்டுவரி ரசீது காட்ட வேண்டும் என்ற நிபந்தனையால், வாடகை வீடுகளில் வசிக்கும் பாதிக்கப்பட்ட மக்களால் நிவாரணம் பெற இயலவில்லை.

அரசியல் பாரபட்சமோ, நிபந்தனைகளோ இன்றி நிவாரண உதவி வழங்க த‌மிழக அரசு உத்தரவிட வேண்டும். மத்திய குழு, அறிக்கைக்கு காத்திருக்காமல், இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். பயிர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதை கணக்கில் கொண்டு விவசாயிகள் கேட்பது போல், ஹெக்டேருக்கு ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும் எ‌ன்று சர‌த்குமா‌ர் வ‌லியு‌த்‌தியு‌ள்ளா‌ர்.