ஆர்.எஸ்.மங்கலத்தில் 7 செ.மீ மழை
புதன், 10 டிசம்பர் 2008 (17:51 IST)
தமிழகத்தில் உட்புற பகுதிகளிலும், கடலோரப் பகுதிகளிலும் நேற்று பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலத்தில் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
அடுத்ததாக நாமக்கல் மாவட்டம் கொள்ளிடம், சீர்காழி, கடலூர் மாவட்டம் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், சேத்தியாதோப்பு, ராமநாதபுரம், பெரம்பலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ மழை பெய்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு, மதுராந்தகம், கடலூர் மாவட்டம் பரங்கிபேட்டை, ஸ்ரீமுஷ்ணம், விருத்தாசலம், கும்பகோணம், கொடவாசல், மயிலாடுதுறை, ராமேஸ்வரம், பழனி ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் தாமரைபாக்கம், விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை, தஞ்சாவூர் மாவட்டம் முடுக்கூர், ஒரத்தநாடு, பாபநாசம், திருவிடைமருதூர், திருவாரூர் மாவட்டம் வலங்கைமான், திருத்துறைபூண்டி, புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி, அறந்தாங்கி, கரம்பக்குடி, திருவாடனை, தொண்டி, திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு, தென்காசி, வந்தவாசி, உடுமலைபேட்டை, குன்னூர், அரியலூர், முசிறி, புல்லம்பாடி, இளையான்குடி, மானாமதுரை ஆகிய இடங்களில் தலா 2 செ.மீ மழை பெய்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி, திருவள்ளூர், பண்ருட்டி, கள்ளக்குறிச்சி, திண்டிவனம், வானூர், விழுப்புரம், புதுச்சேரி விமான நிலையம், அதிராமபட்டிணம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவையாறு, வல்லம், நன்னிலம், நீடாமங்கலம், வேதாரண்யம், பட்டுக்கோட்டை, திருமயம், பரமக்குடி, பாம்பன், அம்பாசமுத்திரம், ஆய்குடி, ராதாபுரம், தூத்துக்குடி மாவட்டம் சூரங்குடி, கன்னியாகுமரி மாவட்டம் தோவாலை, குளித்துறை, கன்னியாகுமரி, ஆத்தூர், ஏற்காடு, உதகமண்டலம், அரவக்குறிச்சி, கடவூர், குழித்தலை, பெரம்பலூர், லால்குடி, சமயபுரம், துறையூர், காரைக்குடி, திருப்பத்தூர், அருப்புக்கோட்டை, கொடைக்கானல் ஆகிய இடங்களில் தலா ஒரு செ.மீ மழை பதிவாகியுள்ளது.
அடுத்த இரண்டு நாட்களில் தென் தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என்றும் வட தமிழகம், புதுச்சேரியில் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் தமிழகமான சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், தேனி, மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் சில பகுதிகளில் மிதமானது முதல் இலோசான மழை பெய்யும் என்றும் தமிழகம், புதுச்சேரியில் ஆங்காங்கே மிதமானது முதல் இலோசான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.