அடு‌த்த சட்ட‌ப்பேரவை‌த் தேர்தலிலும் தி.மு.க. வெற்றிபெறும்: கருணாநிதி

செவ்வாய், 9 டிசம்பர் 2008 (17:01 IST)
த‌மிழக‌த்‌தி‌லஅடு‌த்தநட‌க்கவு‌ள்ச‌ட்ட‌ப்பேரவை‌ததே‌ர்த‌லிலு‌ம் ‌ஆளு‌ங்க‌ட்‌சியான ி.ு.க. தலைமை‌யிலான கூ‌ட்ட‌ணிதா‌னவெ‌ற்‌றிபெறு‌மஎ‌ன்றத‌மிழமுத‌ல்வரகருணா‌நி‌தி கூ‌றியு‌ள்ளா‌ர்.

இதுகு‌றி‌த்தஅவ‌ர் ‌விடு‌த்து‌ள்கடிதத்தில் கூறியிருப்பதாவது:

டெல்லி, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீ‌ஷ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் நடைபெ‌ற்ற ச‌ட்ட‌ப்பேரவை‌ததேர்தல் முடிவுகள் கண்டு, நாம் மட்டுமல்ல இந்த நாடே ஒரு நம்பிக்கை கலந்த மகிழ்ச்சி கொண்டுள்ளது.

இந்த வெற்றிப்படி ஐக்கிய முற்போக்கு கூட்டணியை டில்லி பட்டணத்தில் பாராளுமன்றத்தில் அமர வைத்து தொடர்ந்து நாட்டுப் பரிபாலனத்தை நடத்திடுக என்று ஆணையிடும் அளவுக்கு அமைந்திடத்தான் போகிறது.

அதை‌த்தான் நேற்று செய்தியாளர்கள் என்னைச் சந்தித்துக் கேட்டபோதும் பாராளுமன்றத் தேர்தல் முடிந்து டெல்லியில் ஆட்சி அமைக்கப்போவது காங்கிரஸ் கட்சிதான் என்ற பதிலை அளித்தேன்.

2009இல் டெல்லியிலே மட்டுமல்ல 2011இல் நடைபெறவுள்ள தமிழகப் பொது‌தேர்தலிலும் ஆளுங்கட்சி‌க் கூட்டணிதான் வெற்றிபெறும். ஆட்சி அமைக்கும் உன்னை நம்பித்தான் உடன்பிறப்பே உன் அண்ணன் இந்த உறுதியை அளிக்கிறேன்.

இவ்வாறு கருணா‌நி‌தி தனதகடித‌த்‌தி‌‌ல் கூறியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்