ஐ.எஸ்.ஐ. முத்திரை மோசடி: சிமெண்ட் நிறுவனத்திற்கு ரூ.40,000 அபராதம்

செவ்வாய், 9 டிசம்பர் 2008 (13:02 IST)
ஐ.எஸ்.ஐ. முத்திரையை தவறாக பயன்படுத்தி சிமெண்ட் தயாரித்த நிறுவனத்திற்கு நாமக்கல் நீதிமன்றம் ரூ.40 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.

நாம‌க்க‌லமாவ‌ட்ட‌ம், பரம‌த்‌தி வேலூ‌‌‌ர், தேவனா‌ம்பாளைய‌த்‌தி‌லநியூ சென்னை சிமெண்ட் பி லிட், என்ற சிமெண்ட் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிறுவனம் தரமற்ற சிமெண்‌ட்டை உற்பத்தி செய்து அதற்கு ஐ.எஸ்.ஐ. முத்திரையை‌த் தவறாக பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

அதாவது 43 கிரேடு ஓபிசி சிமெண்ட் ஐஎஸ்ஐ முத்திரையுடன் தயாரித்து அது ஐஎஸ் 1089 (பிடி 1)-க்கு இணையாக இருப்பதாக விற்பனை செய்து வந்தது. இதன் மூலம் இந்திய தரநிர்ணய சட்டம் 1986-ஐ ‌மீ‌றி‌யிரு‌ப்பததெரியவந்தது.

இதையடுத்து இந்நிறுவனத்தில் 2006 நவம்பர் 22 அன்று அதிரடி ஆய்வு நடத்திதர‌நி‌ர்ணஅ‌திகா‌ரிக‌ள், 2007 ஏப்ரல் 19 அன்று நாமக்கல் நீதிமன்றத்தில் வழக்கு தொடு‌த்தன‌ர்.

வழக்கை விசாரித்த நாமக்கல் மாவட்ட நீதிமன்ற தலைமை நீதிபதி, ஐ.எஸ்.ஐ. முத்திரையை‌த் தவறாக பயன்படுத்திய இந்நிறுவனத்திற்கு ரூ.40 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்