"திருவிளையாடல்'' "தெரு விளையாடல்'' ஆகலாமா?: நெடுமாறனுக்கு கருணாநிதி கே‌ள்‌வி !

ஞாயிறு, 7 டிசம்பர் 2008 (15:43 IST)
வ‌ங்‌‌கிகளதே‌சியமயமா‌க்‌கியது தொட‌ர்பாக கூ‌றிய கரு‌த்து‌க்கு, வரலாற்றுப் புரட்டல், வரலாற்றைத் திரிக்கும் கருணாநிதி எ‌ன்று பழ. நெடுமாற‌ன் கூ‌றி‌யிரு‌ப்பத‌ற்கு‌ ப‌தி‌ல் அ‌‌ளி‌த்து‌ள்ள முத‌ல்வ‌ர் கருணாந‌ி‌தி, "திருவிளையாடல்'' இப்படித் "தெரு விளையாடல்'' ஆகலாமா எ‌ன்று‌ம் கே‌ள்‌வி எழு‌ப்‌பியு‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
இததொட‌ர்பாஅவ‌ரஇ‌ன்றஎழுதியுள்ள கடிதத்தில், "பழ.நெடுமாறன். திராவிட இயக்கம், தேசிய இயக்கங்களின் தலைமையுடன் பிணக்கு கொள்ளும் போதெல்லாம் புதிய புதிய பெயர்களில் இயக்கங்கள் தொடங்கியும், புதிய கொடிகளைக் கையில் ஏந்தியும், அவர் அரசியல் பயணம் அவ்வப்போது மேற்கொண்ட காரணத்தால், எல்லாப்பகுதிகளிலும், திசைகளிலும் நண்பர்களைப் பெற்றிடும் வாய்ப்பையும் பெற்றுள்ளார்.

என்னைப் பொறுத்த வரையில் நான் கழகத்தின் நிர்வாகப்பொறுப்பை ஏற்றிருக்கும் போதும், ஆட்சிப் பொறுப்பு ஏற்றிடும் நிலையிலும், நான் போகுமிடமெல்லாம் கறுப்புக் கொடிகாட்டும் போராட்டங்களை நடத்தி வந்தார். இவற்றுக்கிடையே அவரும் நானும் இணைந்து தமிழுக்காக, இனத்திற்காக, இலங்கைப் பிரச்சனைக்காக நடத்திய அறப்போராட்டங்களும் உண்டு.

அவரைப் பாராட்டி நான் பல மேடைகளில் பேசியதும் உண்டு. முரசொலி கடிதங்களிலும் எழுதி மகிழ்ந்ததும் உண்டு. "பொடா'' எனும் எதேச்சாதிகார சட்டத்தால் கொட்டப்பட்டு, வைகோ, ஜெயலலிதா ஆட்சியில் வேலூர் சிறையில் ஓராண்டு காலம் பூட்டப்பட்டுக் கிடந்த போது, இவரையும் அந்தப்பொடா'' தீண்டி அலைக் கழித்ததைக் கண்டித்து இவரது விடுதலை கோரிப் போரிட்டவர்களில் நான் முதன்மையானவனாகவும் இருந்துள்ளேன்.

இலங்கைத்தமிழர்களின் பாதுகாப்புக்காக மதுரையில் வாஜ்பாய், என்.டி. ராமராவ் போன்ற அனைத்திந்திய தலைவர்களை அழைத்து நடை பெற்ற "டெசோ'' மாநாட்டை நடத்தியவர்களில் நானும், பேராசிரியரும், நெடுமாறனும், தமிழர் தலைவர் வீரமணியும் முக்கிய நிர்வாகிகளாக இருந்தோம் என்பதை வரலாறு மறக்காது, மறக்க முடியாது.

ஆனால் அவருடைய இயல்பு, மாற்றிக் கொள்ள முடியாத ஒன்றாகி விட்ட காரணத்தினால் இடம் மாறும் இலட்சியவாதியாகவே இருந்து விட்டார். எனக்குள்ள கவலையெல்லாம், அவர் இப்படி இடம் மாறிக் கொண்டே இலட்சியத்தையும் பந்தாடிக் கொண்டிருக்கிறாரே என்பதால் மட்டுமல்ல, அப்படி "தாவும் அரசியலை'' அவரால் தவிர்க்க முடியாது என்பது உறுதியாகிவிட்ட போதிலும், உண்மை வரலாறுகளையும், வரலாற்றுச் செய்திகளையும், மறைப்பதற்குப்படாத பாடுபட்டு, அவருக்கே உரியதாகிவிட்ட அசல் பொய்களை "அச்சு'' வாகனங்களில் ஏற்றி அவற்றை உலவ விடுகிறாரே, பண்பாளர் பழனியப்பனாரின் திருமகனாரின் இத்தகைய "திருவிளையாடல்'' இப்படித் "தெரு விளையாடல்'' என ஆகலாமா என்பதே எனக்குள்ள வருத்தமாகும்.

1969 ஆம் அண்டு, அண்ணாவை அடுத்து நான் தமிழக முத‌ல்வ‌ரபொறுப் பேற்றுக் கொண்ட நிலையில், டெல்லியில் நடைபெற்ற தேசிய வளர்ச்சிக்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட போது, வங்கிகளை தேசிய மயமாக்க வேண்டுமென்று வலியுறுத்திக் கூறினேன்.

அதனையேற்று 14 வங்கிகளை தேசியமயமாக்கிய காரணத்திற்காக பிரதமர் இந்திராகாந்தி அம்மையாரை சென்னைக்கு அழைத்து, ராஜாஜி மண்டபத்தில் நடைபெற்ற விழாவில், 14 பொருட்களைப் பரிசாக அவருக்கு வழங்கினேன் என்பதையும் அந்த விழாவிலே கூறினேன்.

இவ்வாறு நான் கூறியதை நண்பர் நெடுமாறனால் தாங்கிக் கொள்ள முடிய வில்லை. வார ஏட்டாளர் ஒருவரைப் பிடித்து, பேட்டி என்ற பெயரால் நான் கூறியது வரலாற்றுப் புரட்டல், வரலாற்றைத் திரிக்கும் கருணாநிதி என்றெல்லாம் தன் வயிற்றெரிச்சலையும், காழ்ப்புணர்ச்சியையும் கொட்டித் தீர்த்திருக்கிறார். நான் கூறியதில் எதைத் திரித்துக் கூறியிருக்கிறேன்.

நான் முத‌ல்வ‌ர்க‌ள் மாநாட்டில் வங்கிகளைத் தேசிய மயமாக்க வேண்டும் என்று சொன்னதை இல்லை என்று மறுக்கிறாரா? அல்லது இந்திராகாந்தி வங்கிகளைத் தேசிய மயமாக்கி ஆணை பிறப்பித்தார் என்பதை மறுக்கிறாரா? வங்கிகளை தேசியமயமாக்க பெருந்தலைவர் காமராஜரைப் போன்ற வேறு பலரும் குரல் கொடுத்தார்கள் என்று சொல்லியிருக்கிறார். அதை நான் இல்லை என்று மறுக்கவில்லையே? பல பேர் கேட்டிருக்கலாம். ஏன் அதற்கு முன்பும் கேட்டிருக்கலாம். நடந்ததைச் சொல்லியிருப்பதில் அவருக்கு என்ன குறைபாடு? நான் எந்த வரலாற்றைத் திரித்துக் கூறி விட்டேன்? 18.4.1969 அன்று டெல்லியிலே மாநில முத‌ல்வ‌ர்க‌ளஎல்லாம் கலந்து கொள்ளும் தேசிய வளர்ச்சிக் குழு கூட்டம் நடைபெற்றது. பழைய தமிழ், ஆங்கில ஏடுகளைப் புரட்டிப் பார்த்தாலே அது தெரியும். அந்தக் கூட்டத்தில் நான் ஆற்றிய உரையும் அரசாங்க கோப்புகளிலே உள்ளது. அதையும் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

அது கூட தவறு என்று நெடுமாறன் வாதிடுவாரேயானால் - "இந்து'' ஆங்கில நாளிதழை அவர் நம்புவார் என்று கருதுகிறேன். 1969ஆ‌ம் ஆண்டு ஏப்ரல் 20‌ஆ‌ம் தேதி வெளிவந்த "இந்து'' ஆங்கில நாளிதழை வாங்கிப்படித்துப் பார்த்துக் கொள்ளட்டும். அந்தச் செய்திக்கு தலைப்பே "வங்கிகளை தேசிய மயமாக்கிட வேண்டுமென்று கருணாநிதி கேட்டுக் கொண்டார். இந்தக் கோரிக்கை மத்திய அரசின் மூத்த அதிகாரிகளில் சிலருக்கு ஆச்சரியத்தை உண்டாக்கியது'' என்று எழுதியுள்ளது. நான் தான் வரலாற்றை திசை திருப்புகிறேன் என்றால், "இந்து'' நாளிதழுமா வரலாற்றைத் திசை திருப்பியது என்று நெடுமாறன் கூறுகிறார்?

உண்மைச் செய்தி ஒன்றை - வரலாற்றில் இடம் பெற்ற செய்தியை - நான் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்காக நடைபெற்ற நிகழ்ச்சியிலே எடுத்துக் கூறியதற்காக ஒரு மூத்த அரசியல்வாதி இந்த அளவிற்கு பொறாமை கொண்டு ஒரு பேட்டியை கொடுக்கிறார் என்றால் - தமிழ்நாட்டு மக்கள் அவருடைய தரத்தையும் - கடந்த கால ஆட்சியிலே அவர் சிறையிலே இருந்த போது அவரை வெளியே கொண்டு வருவதற்காக ஆளுங்கட்சியை எதிர்த்து வாதிட்ட என்னுடைய தரத்தையும் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

நெடுமாறன் போன்ற தமிழகத்திலே உள்ள மூத்த அரசியல்வாதிகள் -விவரம் புரிந்தவர்கள் - மக்களுக்கு உதவிகரமான திட்டங்களைச் சொல்வதில் உதவியாக இருக்க வேண்டுமே தவிர - எப்போதும் குதர்க்கவாதியாக இருந்து கொண்டு, ஏதாவது குற்றம் குறை சொல்ல வேண்டும் என்பதிலேயே அக்கறை காட்டுவது; பழனியப்பன் என்ற பெயரைச் சுருக்கி "பழ'' என்று குறிப்பிட்டிருப்பதற்கு ஏற்புடையதாக ஆகாது என்பதை மட்டும் நண்பர் நெடுமாறனுக்கு சுட்டிக்காட்டக் கடமைப்பட்டிருக்கிறேன். எனவே இப்படித் தடுமாறுவது நெடுமாறனுக்கு அழகல்ல!" எ‌ன்று கருணாந‌ி‌தி கூ‌றியு‌ள்ளா‌ர்.