வெள்ள சேத ம‌தி‌ப்‌பீடு : மத்திய குழு இன்று த‌மிழக‌ம் வருகை!

ஞாயிறு, 7 டிசம்பர் 2008 (12:47 IST)
த‌மிழக‌த்‌தி‌ல் அ‌ண்மை‌யி‌ல் பெய‌த மழை, வெ‌ள்ள‌த்தா‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்ட பகு‌தி‌க‌‌ளி‌ல் வெ‌ள்ள சேத‌ம் கு‌றி‌த்து ம‌தி‌ப்‌பிட, ம‌த்‌திய இணை செயல‌ர் ‌ஸ்க‌ந்த‌ன் தலைமை‌யிலான 8 பே‌ர் கொ‌ண்ட குழு இ‌ன்று மாலை த‌மிழக‌ம் வரு‌கிறது.

வ‌ங்க‌க்கட‌லி‌ல் கட‌ந்த வார‌ம் உருவான ‌'நிஷா' புய‌ல் காரணமாக த‌மிழக‌த்‌தி‌‌ன் ப‌ல்வேறு இட‌ங்க‌ளி‌ல் பெ‌ய்த கன மழை, வெ‌ள்ள‌ம் காரணமாக 180‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள் உ‌யி‌ரிழ‌ந்தன‌ர். ஆ‌யிர‌க்கண‌க்கான ப‌யி‌ர்க‌ள் ‌நீ‌‌‌ரி‌‌ல் மூ‌ழ்‌கியது.

வெள்ள நிவாரண பணிகள் குறித்து, உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை துணைக்குழுவின் இரண்டாம் கூட்டம் நேற்று நடந்தது.

இ‌ந்த கூ‌ட்ட‌த்‌தி‌ல், இதுவரை வெள்ளத்தால் 189 பேர் இறந்துள்ளதாகவும், 4,997 கால்நடைகள் உயிர் இழந்துள்ளதாகவும், 5,06,675 குடிசைகள் முழுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், 4,93,970 குடிசைகள் பகுதியாக சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. 1,597 கிராமங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மேலு‌ம், கடந்த கூட்டத்தில் அமைச்சரவை துணைக்குழு அறிவுறுத்தியவாறு மத்திய அரசுக்கு அனுப்பப்படவேண்டிய வெள்ள சேதார அறிக்கையைத் திருத்தி, திருத்திய அறிக்கையின்படி தற்காலிக சீரமைப்புப் பணிகளுக்கான நிதி ரூ.658 கோடியிலிருந்து ரூ.1,893 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல், வெள்ள சேதத்தை பார்வையிட மத்திய அரசு நிபுணர் குழுவை அனுப்பி வைத்துள்ளது. மத்திய இணை செயலர் ஸ்கந்தன் தலைமையில் 8 பேர் கொண்ட குழுவினர் இன்று தமிழகம் வருகிறார்கள்.

இ‌ந்த குழு த‌‌மிழக‌த்‌‌தி‌ல் வெ‌ள்ள‌த்தா‌ல் அதிகம் பாதிக்கப்பட்ட கடலூர், நாகை, உள்பட கடலோர மாவட்டங்களுக்கு சென்று வெள்ளசேதத்தை பார்வையிடுகிறார்கள். ‌பி‌ன்ன‌ர், தலைமை செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி மத்திய அரசுக்கு அறிக்கை தா‌க்க‌ல் செ‌ய்ய இரு‌க்‌கி‌ன்றன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்