டீசல்: ‌லி‌ட்டரு‌க்கு ரூ.10 குறைக்ககோ‌ரி டிச.20 முதல் காலவரையற்ற லாரி வேலை‌நிறு‌த்த‌ம்!

ஞாயிறு, 7 டிசம்பர் 2008 (16:48 IST)
டீசல் விலையை லிட்டருக்கு ரூ.10 குறைக்காவிட்டாலடிச‌‌ம்ப‌ர் 20ஆ‌ம் தேதி முதல் நாடதழு‌விய அள‌வி‌ல் நடைபெற உ‌ள்ள காலவரையற்ற வேலை ‌நிறு‌த்த‌த்‌தி‌லப‌ங்கே‌ற்க‌ப் போவதாக சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்ட லாரி, வேன் உரிமையாளர்கள் நல அமைப்பு அ‌றி‌வி‌த்து‌ள்ளது.

சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்ட லாரி, வேன் உரிமையாளர்கள் நல அமைப்பின் நிர்வாகிகள் கூட்டம் அகில இந்திய மோட்டார் டிரான்ஸ் போர்ட் காங்கிரஸ் நிர்வாகி ஆர்.சுகுமார் தலைமையில் நடந்தது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் :

மழையால் பெரும் சேதம் அடைந்துள்ள வடசென்னை சாலைகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அந்த சாலைகளை போர்க்கால அடிப்படையில் செப்பனிட வேண்டும்.

காலதாமதம் ஏற்பட்டால், 20ஆ‌ம் தேதி நள்ளிரவு முதல் வடசென்னை பகுதியிலும், துறைமுகப்பகுதிகளிலும் உள்ள தொழிற்சாலைகளுக்கு லாரி டிரைலர், வேன்களை இயக்க மாட்டார்கள்.

டீசல் விலையை லிட்டருக்கு 10 ரூபாயை மத்திய அரசு உடனடியாக குறைக்க வேண்டும். இல்லாவிட்டால், அகில இந்திய அளவில் 10ஆ‌மதேதி நடைபெறும் ஆர்ப்பாட்டம் மற்றும் 20ஆ‌ம் தேதி நள்ளிரவு முதல் நடைபெறும் காலவரையற்ற வேலை நிறுத்தத்திலும் ஈடுபடுவோம் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

வெப்துனியாவைப் படிக்கவும்