புயல் சின்னம் வலுவிழந்தது : வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம்!

ஞாயிறு, 7 டிசம்பர் 2008 (18:38 IST)
சென்னையில் இருந்து 1,300 கி.மீ. தொலைவில் அந்தமானுக்கும் தமிழக கடற்கரைக்கும் இடையே மையம் கொண்டு இருந்த புய‌ல் ‌சி‌ன்ன‌ம் வலு‌விழந்தது. இ‌ந்த புய‌ல் நாகப்பட்டினத்துக்கும் - தூத்துக்குடிக்கும் இடையே நாளை கரை கட‌க்கு‌ம் எ‌ன்று வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

வ‌ங்க‌க் கட‌லி‌‌ல் உருவான இ‌‌ந்த புயல் சின்ன‌‌ம் வலுவடை‌ந்து வந்ததால் தமிழகம் முழுவதும் ‌மீ‌ண்டு‌ம் சூறாவ‌ளி‌க் கா‌ற்றுட‌ன் கன மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், திடீரெ‌ன இன்று அதிகாலையில் இரு‌ந்து புயல் வலு‌விழந்து வருகிறது. நாளை காலை நாகப்பட்டினத்துக்கும் - தூத்துக்குடிக்கும் இடையே ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே புயல் கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனா‌ல், அடுத்த 48 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் கன மழை பெய்யும். கடல் கொந்தளிப்பாக இருக்கும். மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

சென்னையில் மழை பெய்யும். சென்னையில் எந்த அளவுக்கு மழை பெய்யும் என்பதை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் அருகே நகர்ந்து வரும்போதுதான் சொல்லமுடியும் எ‌ன்று‌ம் தெ‌ரிவ‌ி‌த்து‌ள்ளது.

வானிலை மைய எச்சரிக்கையை‌த் தொடர்ந்து தூத்துக்குடி துறைமுகத்தில் 5ஆ‌ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம், தனுஷ்கோடி, மண்டபம், பாம்பனில் கடல் கொந்தளிப்பாகவும் அலைகள் சீற்றத்துடனும், காற்றின் வேகம் அதிகமாகவும் காணப்பட்டது. பாம்பன் துறைமுகத்தில், 1-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

கட‌ந்த ‌வார‌ம் வங்க கடலில் உருவான நிஷா புயல் காரணமாக த‌மிழக‌ம் முழுவது‌ம் ப‌ல்வேறு இட‌ங்க‌ளி‌ல் கன மழை பெ‌ய்தது. இ‌ந்த மழை‌க்கு 180‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள் ப‌லியானா‌ர்க‌ள், ஆ‌யிர‌க்கண‌க்கான ஏ‌க்க‌‌‌ர் நெ‌ற்ப‌யி‌ர்க‌ள் நாசமடை‌ந்தது எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்