ஏப்ரல் 14ஆம் தேதி விடுமுறையை ரத்து செய்வதா? மத்திய அரசுக்கு இல.கணேசன் கண்டனம்
சனி, 6 டிசம்பர் 2008 (15:48 IST)
அம்பேத்காரின் பிறந்த நாளான ஏப்ரல் 14ஆம் தேதியை தேசிய விடுமுறை நாளாக அறிவிக்காத மத்திய அரசை கண்டித்துள்ள தமிழக பா.ஜ.க. தலைவர் இல.கணேசன், குறைந்தபட்சம் தமிழக அரசாவது ஏப்ரல் 14ஆம் தேதியை விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
webdunia photo
FILE
வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது அம்பேத்காரின் பிறந்தநாளான ஏப்ரல் 14ஆம் தேதியை நாடு முழுவதும் தேசிய விடுமுறையாக அறிவித்து உத்தரவிட்டார் என்றும் மத்தியில் ஆட்சி பொறுப்புக்கு வந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அதை ரத்து செய்துள்ளது என்று குற்றம்சாற்றியுள்ளார்.
நேற்று வெளியிடப்பட்டுள்ள தேசிய விடுமுறைநாள் பட்டியலில் அம்பேத்கார் பிறந்தநாள் இடம் பெறவில்லை என்றும் இது கண்டனத்துக்குரியது என்றும் தெரிவித்துள்ளார்.
குறைந்தபட்சம் தமிழக அரசாவது ஏப்ரல் 14ஆம் தேதியை விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என்று இல.கணேசன் கேட்டுக் கொண்டுள்ளார்.