பாபர் மசூதியை மீண்டும் கட்டித்தரக் கோரி ரயில் மறியல்: 1,500 இஸ்லாமியர்கள் கைது
சனி, 6 டிசம்பர் 2008 (15:22 IST)
அயோத்தியில் பாபர ் மசூத ி இடிக்கப்பட்ட இடத்தில் அதை மீட்டும் கட்டித்தரக் கோரி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் தமிழ க முழுவதும ் இன்ற ு நடந் த ரயில ் மறியல ் போராட்டத்தில ் 1,500 பேர் கைத ு செய்யப்பட்டனர ். பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி தமிழகம ் முழுவதும ் ரயில் மறியலில் ஈடுபடப்போவதாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம ், தமிழ்நாட ு துவாத ் ஜமாத ் உள்ளிட்ட அமைப்புகள் அறிவித ் திருந் தன. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழ கத் தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கூடி, அயோத்தியில் பாபர் மசூதியை மீண்டும் கட்டித்தர வேண்டும், பாபர் மசூதி இடிப்பு விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்ட லிபர்ஹான் விசாரணை ஆணையத்தின் அறிக்கை விவரங்களை வெளியிட வேண்டும், பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றவாளிகள் அனைவருக்கும் உடனடியாக தண்டனை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். பின்னர் அவர்கள் மறியலுக்கு புறப்பட்ட போது காவல்துறையினர் அவர்களை தடுத்து கைது செய்தனர். இதேபோல் சென்னை எழும்பூரிலும் மறியலில் ஈடுபட முயன்ற நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமியரை காவல்துறையினர ் கைது செய்தனர ். மேலும் விழுப்பு ர ம ், சேலம ், ஈரோட ு, சிவகங்க ை, தேன ி ஆகி ய மாவட்டங்களில ் ரயில ் நிலையத்தில ் மறியல ் போராட்டத்தில ் ஈடுப ட முயன்றபோத ு ஆயிரத்து 500க்கும் மேற்பட்டவர்கள் கைத ு செய்யப்பட்டனர ். இந் த மறியல ் போராட்டத்தின ் போத ு, ப ா.ஜ.க முன்னாள ் தலைவர ் எல ். க ே. அத்வான ி, முன்னாள ் அமைச்சர ் முரளிமனோகர ் ஜோஷ ி, வ ி. எச ். ப ி. தலைவர ் அசோக்சிங்கால ், உமாபாரத ி ஆகியோருக்க ு எதிரா க முழக்கங்கள் எழுப்பப்பட்ட ன.
செயலியில் பார்க்க x